பொழுதுபோக்கு

ரூ300 கோடிக்கு மேல் சொத்து, பட்டுப்புடவை கலெக்ஷன்ஸ்; ரூ100 கோடி பங்களாவில் வாழும் வாரிசு நடிகை!

Published

on

ரூ300 கோடிக்கு மேல் சொத்து, பட்டுப்புடவை கலெக்ஷன்ஸ்; ரூ100 கோடி பங்களாவில் வாழும் வாரிசு நடிகை!

தமிழ் சினிமாவில் காதல் மன்னன் என்ற அடையாளத்துடன் திகழ்ந்தவர் ஜெமினி கணேசன். இவரது மகள் ரேகா. பாலிவுட் சினிமாவில் பல வெற்றிப்படங்களை கொடுத்து இன்றுவரை முன்னணி நடிகைகளின் பபட்டியலில் முக்கிய இடத்தை பிடித்துள்ளார்.இந்த செய்தியை மலையாளத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்:பாலிவுட்டின் புகழ்பெற்ற மற்றும் ஜாம்பவான் நடிகைகளில் ஒருவராக இருக்கும் ரேகா லட்சக்கணக்கான ரசிகர்களால் ‘உம்ராவ் ஜான்’ என்று அன்புடன் அழைக்கப்படுபவர். தற்போது திரைப்படங்களில் அதிகமாக நடிக்காவிட்டாலும், பாலிவுட்டின் முக்கியமான நிகழ்ச்சிகள் அனைத்திலும் ரேகா தவறாமல் கலந்துகொள்கிறார். விலை உயர்ந்த காஞ்சிபுரம் பட்டுச் சேலைகள் மற்றும் நகைகள் அணிந்து வரும் ரேகா, எல்லா நிகழ்ச்சியிலும் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கிறார்.ஒரு ராணியைப் போன்ற ஆடம்பரமான வாழ்க்கையை அவர் வாழ்ந்து வருகிறார். பாலிவுட்டின் பணக்கார நடிகைகளில் ரேகாவும் ஒருவர். அவரது சொத்து மதிப்பு சுமார் ரூ332 கோடி என்று கூறப்படுகிறது. மும்பையில் உள்ள ‘பசேரா’ என்ற பங்களாவில்தான் ரேகா வசிக்கிறார். இந்தப் பங்களாவின் மதிப்பு ரூ100 கோடி என்று தகவல் வெளியாகி உள்ளது. நாடு முழுவதும் பல இடங்களில் இவருக்கு சொத்துக்கள் உள்ளன. அவற்றில் பல வாடகைக்கு விடப்பட்டுள்ளன. இதன் மூலம் மாதந்தோறும் லட்சக்கணக்கில் வருமானம் ஈட்டி வருகிறார்.ரேகாவிடம் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் (ரூ6.01 கோடி), மெர்சிடஸ் பென்ஸ் எஸ்-கிளாஸ் (ரூ2.17 கோடி), ஆடி ஏ8 (ரூ1.63 கோடி), ஹோண்டா சிட்டி (ரூ13 லட்சம்), பி.எம்.டபிள்யூ ஐ7 எலெக்ட்ரிக் (ரூ2.03 கோடி) போன்ற ஆடம்பர கார்களின் சிறந்த சேகரிப்பு உள்ளது. ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காரை சொந்தமாக வைத்துள்ள வெகு சில பாலிவுட் நட்சத்திரங்களில் ரேகாவும் ஒருவர். திரைப்படங்களில் நடிக்காவிட்டாலும், பல வழிகளில் ரேகா ஏராளமான பணத்தை சம்பாதிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.மேலும், தனிப்பட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள லட்சக்கணக்கில் கட்டணம் வாங்குவதாகவும் கூறப்படுகிறது. ஸ்டேஜ் நிகழ்ச்சிகள், விருது விழாக்கள், ரியாலிட்டி ஷோக்களில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ளவும் அவர் பெரிய தொகையை கட்டணமாகப் பெறுகிறார். விளம்பர பலகைகளில் தனது படத்தை பயன்படுத்த ரூ10 லட்சம் முதல் ரூ20 லட்சம் வரை நடிகை கட்டணம் வசூலிப்பதாகவும் தகவல்கள் உள்ளன. வாழ்க்கையில் நிதித் திட்டமிடலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் ரேகா, திரைப்படங்களில் தீவிரமாக இருந்த காலத்திலேயே எதிர்காலத்திற்காக சிறந்த முதலீடுகளைச் செய்துள்ளார்.பல ஃபிக்ஸட் டெபாசிட்களும் அவரது பெயரில் உள்ளன. இந்த செல்வங்களுக்கு அப்பால், ரேகாவிடம் பொறாமைப்பட வைக்கும் சேலை கலெக்டஷன்ஸ் உள்ளது. சேலை அணிவதை மிகவும் விரும்பும் அவர், விலை உயர்ந்த காஞ்சிபுரம் பட்டுச் சேலைகளின் குறிப்பிடத்தக்க கலெக்ஷன்களை வைத்துள்ளார். அதோடு, மதிப்புமிக்க பாரம்பரிய மற்றும் பழங்கால நகைகளின் ஒரு பெரிய சேகரிப்பையும் அவர் வைத்துள்ளார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version