இந்தியா
வைத்தியநாதனுக்கு சவால்: ‘அரசியலுக்கு முன் சொத்து என்ன? இப்போது என்ன?’ அ.தி.மு.க. மணிகண்டன் கேள்வி!
வைத்தியநாதனுக்கு சவால்: ‘அரசியலுக்கு முன் சொத்து என்ன? இப்போது என்ன?’ அ.தி.மு.க. மணிகண்டன் கேள்வி!
புதுச்சேரி: தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, புதுச்சேரியில் முன்னாள் அமைச்சர் மல்லாடி கிருஷ்ண ராவ் உருவம் அச்சிடப்பட்ட பரிசுத் தொகுப்பை வீடு வீடாகச் சென்று வழங்கி, அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வையாபுரி மணிகண்டன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.புதுச்சேரி மாநில அதிமுக துணை செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான வையாபுரி மணிகண்டன், முத்தியால்பேட்டை தொகுதியில் உள்ள 12,500 குடும்ப அட்டைகளுக்கும் தீபாவளி பரிசு வழங்கும் நிகழ்வை இன்று நடத்தினார்.முத்தியால்பேட்டை மார்க்கெட் அருகே உள்ள விநாயகர் கோவிலில் பூஜை செய்த பின்னர், வையாபுரி மணிகண்டன் வீடு வீடாகச் சென்று பரிசுகளை வழங்கினார்.இந்தப் பரிசுத் தொகுப்புகளில் ஏனாம் பகுதியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் மல்லாடி கிருஷ்ண ராவ் உருவம் அச்சிடப்பட்டிருந்தது. அவர் பொதுமக்களிடம் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.மல்லாடி கிருஷ்ண ராவ் படம் ஏன்? – வையாபுரி மணிகண்டன் விளக்கம்:பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த வையாபுரி மணிகண்டனிடம், தீபாவளி பரிசுத் தொகுப்பில் முன்னாள் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ் உருவப்படம் இடம்பெற்றது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.இதற்குப் பதிலளித்த அவர், “அரசியலில் திறமை மிக்க அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ் அவர்களை ரோல் மாடலாக எடுத்துக் கொண்டு, எனது அரசியல் பணியைத் தொடங்கி இருக்கிறேன்.வைத்தியலிங்கம் மீது குற்றச்சாட்டு:முன்னாள் முதலமைச்சர் வைத்தியலிங்கம் மீது மல்லாடி கிருஷ்ணராவ் ஆதாரத்துடன் பல்வேறு குற்றச்சாட்டுகளைக் கூறியுள்ளார், ஆனால், வைத்தியலிங்கத்திற்குப் பதில் சட்டமன்றக் கட்சித் தலைவர் வைத்தியநாதன் பதில் அளிக்கிறார்”, என்றார்.மேலும் வைத்தியநாதனுக்கு சவால் விடும் வகையில், “வைத்தியநாதன் அரசியலுக்கு வருவதற்கு முன்பு அவருடைய சொத்து மதிப்பு என்ன, தற்போது அவருடைய சொத்து என்ன என்பதனை அவர் விளக்க வேண்டும். மாற்றுத் தொகுதியிலிருந்து வந்து வீடு வாடகைக்கு எடுத்துத் தங்குபவர்களை மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்” என்று வையாபுரி மணிகண்டன் எச்சரித்தார்.