இலங்கை
40 குற்றவாளிகளுக்கு சிவப்பு அறிவித்தல்!
40 குற்றவாளிகளுக்கு சிவப்பு அறிவித்தல்!
வெளிநாடுகளில் தலைமறைவாகியுள்ள 40 குற்றவாளிகளுக்கு எதிராக சிவப்பு அறிவிப்புகள் விடுக்கப்பட்டுள்ளன என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர் எப்.யு.கே.வுட்லர் தெரிவித்துள்ளார்.
பொலிஸ் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இந்தத் தகவலை வெளியிட்டார். குறிப்பிட்ட 40 பேரில், 18 குற்றவாளிகளை இந்த வருடத்துக்குள் இலங்கைக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும். அதேவேளை, கணேமுல்ல சஞ்சீவ கொலைவழக்கில் தேடப்பட்டு வந்த இஷாரா செவ்வந்தி என்ற பெண் நேபாளத்தில் கைது செய்யப்படுவதற்கு குற்றப்புலனாய்வுத் திணைக்களம், விசேட புலனாய்வுப் பிரிவுகள் மற்றும் வெளிநாடுகளின் ஒத்துழைப்புகள் கிடைத்தன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.