இலங்கை

இவர் மட்டும் இப்படி இருந்தால்….இஷாரா செவ்வந்தியை புகழும் பிரதியமைச்சர்!

Published

on

இவர் மட்டும் இப்படி இருந்தால்….இஷாரா செவ்வந்தியை புகழும் பிரதியமைச்சர்!

   பெண் என்ற வகையில் இஷாராவின் அறிவாற்றல் வியப்பிற்குரியது என்றும் இஷாரா குற்ற செயல்களுக்காக பயன்படுத்திய அறிவாற்றலை நாட்டின் அபிவிருத்திக்காக பயன்படுத்தி இருந்தால் நாடு முன்னேறி இருக்கும் என வீடமைப்பு மற்றும் நீர் விநியோக பிரதியமைச்சர் ரீ.பி சரத் புகழ்ந்து பாராட்டியுள்ளார்.

குற்றச்செயல் ஒன்று பின்னணியில் பெண் என்ற வகையில் இஷாரா பயணம் செய்த பாதை அவர் எவ்வளவு அறிவாற்றல் கொண்ட நபர் என்பதை வெளிப்படுத்துவதாக பிரதியமைச்சர் தெரிவித்துள்ளார்.’

Advertisement

அவரது இந்த ஆற்றல்களை நாட்டை அபிவிருத்தி செய்வதற்காக பயன்படுத்தினால் எவ்வளவு நன்மைகள் கிடைக்கும் எனவும் அவர் கிலாகித்துள்ளார்.

வெலிகந்த நவசேனபுர பகுதியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போது அவர் இந்த விடயங்களை தெரிவித்துள்ளார்.  

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version