இலங்கை

இஷாரா செவ்வந்தி உள்ளிட்டோருக்கு 72 மணி நேர தடுப்புக்காவல்

Published

on

இஷாரா செவ்வந்தி உள்ளிட்டோருக்கு 72 மணி நேர தடுப்புக்காவல்

கணேமுல்ல சஞ்சீவ  கொலைச்சம்பவத்தில்  நேபாளத்தில் கைது செய்யப்பட்டு நேற்று (15) இரவு இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட இஷாரா செவ்வந்தி உட்பட நான்கு சந்தேக நபர்களை 72 மணி நேர தடுப்புக்காவலில் வைத்து விசாரணைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பு குற்றப்பிரிவு,நீதிமன்றத்தில் வியாழக்கிழமை (16) காலை வழக்கு தொடர்ந்தனர். அதனையடுத்தே நீதிமன்றம் மேற்கண்ட உத்தரவை பிறப்பித்துள்ளது.

Advertisement

தடுப்புக்காவல் உத்தரவு வழங்கப்பட்ட மற்ற சந்தேக நபர்கள் ஜே.கே. பாய், சுரேஷ் மற்றும் தக்ஷி ஆகியோர் ஆவார்.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவரான சஞ்சீவ குமார சமரரத்ன அல்லது கணேமுல்ல சஞ்சீவ, கொழும்பு, புதுக்கடை நீதிமன்ற எண் 6 இல் நீதிமன்ற கூண்டில் வைத்து பிப்ரவரி 19 ஆம் திகதி சுட்டுக் கொல்லப்பட்டார்.

துப்பாக்கிதாரிக்கு, துப்பாக்கியை சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி கொடுத்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

Advertisement

சம்பவம் இடம்பெற்ற ஈணாஈள் , புத்தளத்தில் வைத்து அன்றையதினமே துப்பாக்கிதாரி கைது செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version