இலங்கை

இஷாரா செவ்வந்தி கைது தொடர்பில் வெளிச்சத்திற்கு வந்த பல புதிய தகவல்கள்

Published

on

இஷாரா செவ்வந்தி கைது தொடர்பில் வெளிச்சத்திற்கு வந்த பல புதிய தகவல்கள்

நேபாளத்திலிருந்து அழைத்துவரப்பட்டுத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தியிடம் மேற்கொள்ளப்படும் விசாரணைகளின் ஊடாக பல விடயங்கள் தெரியவருவதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

அதன்படி, கணேமுல்ல சஞ்சீவவின் கொலை இடம்பெற்ற பின்னர் இஷாரா செவ்வந்தி தலைமறைவாகியிருந்ததாகக் கூறப்படும் மித்தெனிய பகுதியிலுள்ள வீடு சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

Advertisement

குறித்த வீட்டிற்கு இஷாரா அழைத்துச் செல்லப்பட்டு அங்கு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அத்துடன், தங்காலை பகுதியிலும் இஷாரா தங்கியிருந்துள்ளமை தெரியவந்துள்ளது.

இதேவேளை, சஞ்சீவவின் கொலைக்குப் பின்னர் இஷாரா செவ்வந்தி வாடகை வாகனம் ஒன்றினூடாக கிளிநொச்சிக்கு சென்று அங்கு சில நாட்கள் தங்கியுள்ளார்.

Advertisement

அதன் பின்னர் கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு சென்றுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

யாழ்ப்பாணத்திலிருந்து படகு மூலம் இந்தியாவிற்குத் தப்பிச் சென்றதாக இஷாரா குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் மூன்று வாரங்கள் தங்கியிருந்த நிலையில் அங்கிருந்து நேபாளத்திற்கு தப்பிச் சென்றதாகவும் அவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

Advertisement

இந்தியாவில் சுமார் இரண்டு வாரங்கள் தங்கியிருந்தபோது, ஜே.கே. பாய் அவருக்கு ‘தமிழினி’ என்ற பெயரில் ஒரு இந்திய அடையாள அட்டையை தயாரித்துக் கொடுத்துள்ளார். அதன் பின்னரே நேபாளம் சென்றதாக அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில் பல மாதகால தேடுதலின் பின்னர் இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட 06 சந்தேக நபர்கள் நேபாளத்தில் கைது செய்யப்பட்டு நாட்டிற்கு அழைத்து வரப்பட்டனர்.

இதனையடுத்து, இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட 6 சந்தேக நபர்களையும் 72 மணித்தியாலங்கள் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

Advertisement

எனினும், சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தாது, அறிக்கைகளை சமர்ப்பித்து நீதவானிடம் தடுப்புக்காவலுக்கான அனுமதி பெறப்பட்டுள்ளது.

அதன்படி, இஷாரா செவ்வந்தி, ஜப்னா சுரேஷ், ஜே.கே.பாய் மற்றும் டுப்ளிகேட் இஷாரா என்ற தக்ஷி ஆகியோர் கொழும்பு குற்றதடுப்பு பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

கம்பஹா பாபா என்பவர் மேல் மாகாண வடக்கு குற்றத் தடுப்புப் பிரிவிடமும், நுகேகொட பபி என்பவர் மேல் மாகாண தெற்கு குற்றத் தடுப்புப் பிரிவிடமும் ஒப்படைக்கப்பட்டனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version