இலங்கை

ஐ.எம்.எப். மதிப்பாய்வுகள் 2027ஆம் ஆண்டு நிறைவுறும்; மத்திய வங்கி ஆளுநர் நம்பிக்கை

Published

on

ஐ.எம்.எப். மதிப்பாய்வுகள் 2027ஆம் ஆண்டு நிறைவுறும்; மத்திய வங்கி ஆளுநர் நம்பிக்கை

சர்வதேச நாணயநிதியத்தின் நீடிக்கப்பட்ட கடனுடன் தொடர்புடைய சகல மதிப்பாய்வு நடவடிக்கைகளையும் 2027ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் நிறைவு செய்ய எதிர்பார்க்கப்படுகின்றது என்று மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது-
கடந்த வருடம் இலங்கை ஐந்தாவது கடன் மீளாய்வை முழுமை செய்திருந்தது. இந்த மதிப்பாய்வு எதிர்வரும் டிசெம்பர் மாதத்தில் பணிப்பாளர் சபையில் முன்வைக்கப்படும். அதற்காக பல்வேறு விடயங்கள் தொடர்பாகக் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. ஒன்று 2026ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தை நிறைவேற்றிக்கொள்வது அவசியமாகும். அதற்குமேலதிகமாக முக்கியமான மறுசீரமைப்புகளைச் செய்ய வேண்டியுள்ளது. அரசாங்க நிறுவனங்களை மறுசீரமைப்புச் செய்வது போன்ற விடயங்களும் உள்ளன. ஊழல் மற்றும் அரச பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்கப்படவேண்டும். இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக ஐந்தாவது மீளாய்வு அமையும். இலங்கை 8 மீளாய்வுகளை முழுமை செய்யவேண்டியுள்ளது. 2027ஆம் ஆண்டின் இடைப்பகுதியில் அவற்றை நிறைவுசெய்ய எதிர்பார்க்கின்றோம்- என்றார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version