பொழுதுபோக்கு
ஒண்ணு ரெண்டு தடவை இல்ல, 33 முறை நேருக்கு நேர் மோதல்… விஜயகாந்த் – பிரபு படங்கள் லிஸ்ட் இதுதான்!
ஒண்ணு ரெண்டு தடவை இல்ல, 33 முறை நேருக்கு நேர் மோதல்… விஜயகாந்த் – பிரபு படங்கள் லிஸ்ட் இதுதான்!
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜயகாந்த். இவர் அடிமட்டத்தில் இருந்து சினிமாவிற்கு வந்து தனது முயற்சியால் திரைத்துறையில் தனக்கான இடத்தை பிடித்தார். ‘கேப்டன்’ விஜயகாந்த் என அன்போடு ரசிகர்களால் அழைக்கப்படும் இவர் தன் உடன் இருந்தவர்களுக்கு பல நன்மைகளை செய்துள்ளார். அதுமட்டுமல்லாமல், சீனியர்- ஜூனியர் என்ற பாகுபாடு இல்லாமல் படப்பிடிப்பு தளத்தில் அனைவருக்கும் ஒரே உணவு கொடுக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தார் விஜயகாந்த்.இதேபோன்று தன் தந்தை சிவாஜி கணேசனின் அடையாளத்துடன் திரைத்துறையில் நுழைந்தவர் பிரபு. 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த பிரபு பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். ஒரு காலத்தில் முன்னணி கதாநாயகனான இருந்த நடிகர் பிரபு தற்போது அப்பா, அண்ணன் போன்ற முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார். இப்படி திரைத்துறையில் 90 காலக்கட்டத்தில் முன்னணி நடிகர்களாக இருந்த விஜயகாந்த் – பிரபு படங்கள் ரஜினி – கமல் படங்களை போன்று அடிக்கடி மோதிக் கொண்டுள்ளது.அதாவது, விஜயகாந்த் – பிரபு இருவருக்கும் கணிசமான ரசிகர்கள் கூட்டம் இருந்தது . இதனால் இவர்கள் இருவரின் படமும் ஒரே நாளில் வெளியானால் தியேட்டர் களைகட்டும், இந்த போட்டியை அந்தக் காலத்தில் விநியோகஸ்தர்களும், தியேட்டர் அதிபர்களும் விரும்பினார்கள். திட்டமிட்டு விஜயகாந்த் படங்களும், பிரபு படங்களும் வெளியிடப்படவில்லை. ஆனாலும் யதேச்சையாக இருவர் படங்களும் ஒரேநாளில் வெளியானது. அந்த வகையில் 33 முறை இருவர் படங்களும் ஒரே நாளில் வெளிவந்து மோதி இருக்கிறது. அதில் சில முக்கிமான படங்களை பார்க்கலாம்.நல்ல நாள் – கைராசிக்காரன்வைதேகி காத்திருந்தாள் – வம்ச விளக்குராமன் ஸ்ரீராமன் – நீதியின் நிழல்கரிமேடு கருவாயன் – சாதனைதர்ம தேவதை – அறுவடைநாள்வீரபாண்டியன் – சின்னப்பூவே மெல்ல பேசுஉள்ளத்தில் நல்ல உள்ளம் – அக்னி நட்சத்திரம்தம்பி தங்க கம்பி – என் தங்கச்சி படிச்சவசெந்தூர பூவே – தர்மத்தின் தலைவன்புலன் விசாரணை – காவலுக்கு கெட்டிக்காரன்கேப்டன் பிரபாகரன் – சின்னத்தம்பிமாநகர காவல் – ஆயுள் கைதிசின்னக்கவுண்டர் – பாண்டித்துரைகாவிய தலைவன் – செந்தமிழ் பாட்டுகோவில் காளை – சின்ன மாப்பிள்ளைஎங்க முதலாளி – உழவன்சேதுபதி ஐபிஎஸ் – ராஜகுமாரன்பெரிய மருது – ஜல்லிக்கட்டு காளைகருப்பு நிலா – கட்டுமரக்காரன்அலெக்சாண்டர் – பாஞ்சாலங்குறிச்சிஉளவுத்துறை – பொன்மனம்வீரம் வௌஞ்ச மண்ணு – என் உயிர் நீதானேவானத்தைபோல – திருநெல்வேலி