தொழில்நுட்பம்

ஓப்போ Find X9 சீரிஸ்: 200 mp கேமிரா, 7500mAh பேட்டரி… நவம்பரில் இந்திய அறிமுகம்!

Published

on

ஓப்போ Find X9 சீரிஸ்: 200 mp கேமிரா, 7500mAh பேட்டரி… நவம்பரில் இந்திய அறிமுகம்!

ஓப்போ நிறுவனம் தனது புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் சீரிஸின் ஓப்போ பைண்ட் X9 சீரிஸை (Find X9 மற்றும் Find X9 Pro) அக்டோபர் 16 அன்று சீனாவில் அறிமுகப்படுத்தியது. தொடர்ந்து, அக்.28 அன்று உலகளவில் இந்த சீரிஸ் அறிமுகப்படுத்தப்படும் என நிறுவனம் உறுதியளித்திருந்தது. தற்போது, ஓப்போ சீரிஸ் இந்தியாவில் அறிமுகமாவதையும் உறுதிப்படுத்தியுள்ளது. இந்தியா மொபைல் காங்.2025 மாநாட்டில், இந்தச் சீரிஸ் நவம்பர் மாதம் இந்தியாவில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், அதிகாரப்பூர்வ வெளியீட்டுத் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.ஓப்போ பைண்ட் X9 ப்ரோ: எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்மீடியாடெக் டைமென்சிட்டி 9500 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. LUMO Image எஞ்சின் மூலம் இயங்கும் Hasselblad மாஸ்டர் கேமரா System கொண்டிருக்கும். 200MP Hasselblad டெலிஃபோட்டோ கேமரா (Telephoto Camera) இடம்பெறும். இது ஜூம் காட்சிகளில் நிகரற்ற தெளிவையும் துல்லியத்தையும் வழங்கும் என ஒப்போ தெரிவித்துள்ளது. டால்பி விஷன் உடன் 4K 120fps வரையிலான வீடியோ பதிவை ஆதரிக்கும். மேலும், ACES ஆதரவுடன் கூடிய LOG பதிவு அம்சமும் இதில் இருக்கும். 6.78-இன்ச் டிஸ்ப்ளே கொண்டிருக்கும். இதன் 4 பக்கங்களிலும் 1.15 மி.மீ. அளவுள்ள சீரான (Symmetrical) மெல்லிய பெசல்கள் இருக்கும்.ஆண்ட்ராய்டு 16-ஐ அடிப்படையாகக் கொண்ட ColorOS 16 இடைமுகத்தில் இயங்கும். 7,500mAh சிலிகான் கார்பன் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இது சராசரி பயன்பாட்டில் 2 நாட்கள் வரை பேட்டரி ஆயுளை வழங்கும் என்று ஒப்போ உறுதியளித்துள்ளது. சில்க் ஒயிட் (Silk White), டைட்டானியம் சார்கோல் (Titanium Charcoal) ஆகிய 2 வண்ணங்களில் இந்தியாவில் கிடைக்கும். சீன வேரியண்டில் 50MP வைட்-ஆங்கிள் கேமரா, 50MP அல்ட்ரா-வைட்-ஆங்கிள் கேமரா மற்றும் 50MP முன்புற கேமரா ஆகியவை உள்ளன. இந்திய வேரியண்டின் மற்ற கேமரா விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.ஒப்போ பைண்ட் எக்ஸ்-9: எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்மீடியாடெக் டைமென்சிட்டி 9500 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. LUMO Image Engine மூலம் இயங்கும் Hasselblad மாஸ்டர் கேமரா சிஸ்டம் இருக்கும். டால்பி விஷன் உடன் 4K 120fps வரையிலான வீடியோ பதிவை ஆதரிக்கும். மேலும், ACES ஆதரவுடன் கூடிய LOG பதிவு அம்சமும் இருக்கும். சற்றுக் கச்சிதமான 6.59-இன்ச் ஸ்கிரீன் கொண்டிருக்கும். இதிலும் 4 பக்கங்களிலும் 1.15 மி.மீ. பெசல்கள் இடம்பெறும். ஆண்ட்ராய்டு 16-ஐ அடிப்படையாகக் கொண்ட ColorOS 16 இண்டர்பேஸ் இயங்கும். 7,025mAh சிலிகான்-கார்பன் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. டைட்டானியம் கிரே (Titanium Grey) மற்றும் ஸ்பேஸ் பிளாக் (Space Black) ஆகிய 2 வண்ணங்களில் இந்தியாவில் வெளியிடப்படும். சீனாவில் பைண்ட் X9 ஆனது 50MP வைட்-ஆங்கிள், 50MP அல்ட்ரா-வைட்-ஆங்கிள் மற்றும் 50MP டெலிஃபோட்டோ கேமராவுடன், 32MP முன்புறக் கேமராவையும் கொண்டுள்ளது. இந்திய வேரியண்டின் கேமரா விவரங்கள் குறித்து ஒப்போ மேலும் தகவல்களை வெளியிடவில்லை.ஒப்போ நிறுவனம் இந்த 2 ஸ்மார்ட்போன்கள் பற்றிய கூடுதல் தகவல்களை வரும் வாரங்களில் வெளியிடும் என்று கூறியுள்ளது. இதன்மூலம், இந்திய வாடிக்கையாளர்கள் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் பிரிவில் புதிய அனுபவத்தை எதிர்பார்க்கலாம்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version