இலங்கை

காணாமல் போனதாக கணவர் தவிப்பு; பெண் வெளியிட்ட காணொளியால் அதிர்ச்சி!

Published

on

காணாமல் போனதாக கணவர் தவிப்பு; பெண் வெளியிட்ட காணொளியால் அதிர்ச்சி!

  மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் , வெளிநாடொன்றில் இருந்து நாடு திரும்பிய தனது மனைவியை  காணவில்லையென, பெண்ணின் கணவன், கடந்த சில நாட்களின் முன்னர் முறைப்பாடு செய்திருந்தார்.

இந் நிலையில், தான் வேறொரு திருமணம் செய்து கொழும்பில் வாழ்வதாக அப்பெண் காணொளி வெளியிட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

சாமிமலை ஓல்ட்டன் தோட்டம் நிலாவத்தை பிரிவில் உள்ள, இரண்டு குழந்தைகளின் தாயான, மோகன் நிஷாந்தனி (வயது 33) என்ற பெண்னே காணாமல் போனதாக முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதோடு பதுளை ஸ்பிரிங்வெளி பகுதியை சேர்ந்த ஒருவர் மனைவியை கடத்தியிருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அப்பெண் வெளியிட்ட காணொளியில், தான் காணாமல் போகவில்லை என்றும், வேறொரு திருமணம் செய்து மிகவும் மகிழ்ச்சியாக கொழும்பில் வாழ்ந்து வருவதாக காணொளி வெளியிட்டுள்ளார்.

Advertisement

இந்நிலையில் பெற்ற குழந்தைகளையும் , கணவனையும் விட்டுவிட்டு எப்படி உன்னால் வாழ முடிகிறது என சமூக வலைத்தளவாசிகள் பெண்ணை திட்டி தீர்த்து வருகின்றனர்.   

 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version