இலங்கை
கிளிநோச்சியில் தூக்கில் தொங்கிய யுவதி யாழில் உயிரிழப்பு
கிளிநோச்சியில் தூக்கில் தொங்கிய யுவதி யாழில் உயிரிழப்பு
கிளிநோச்சியில் தூக்கில் தொங்கிய யுவதி ஒருவர் காப்பாற்றப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றையதினம் (16) உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் கிளிநொச்சி ஆனந்தபுரத்தை சேர்ந்த குறித்த யுவதி மனவிரக்தி காரணமாக கடந்த 14 ஆம் திகதி இரவு தூக்கிட்டுள்ளார்.
தூக்கில் இருந்து மீட்டு அவரை கிளிநொச்சி வைத்தியசாலையில் சேர்ப்பித்தனர்.
அதன் பின்னர் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக 15 ஆம் திகதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
எனினும் சிகிச்சை பலனின்றி நேற்றையதினம் (16) உயிரிழந்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.