உலகம்

கென்யாவின் முன்னாள் பிரதமர் ரைலா ஒடிங்கா காலமானார்!

Published

on

கென்யாவின் முன்னாள் பிரதமர் ரைலா ஒடிங்கா காலமானார்!

கென்யாவின் முன்னாள் பிரதமர் ரைலா ஒடிங்கா தனது 80 ஆவது வயதில் காலமானார் என அவரது  குடும்ப வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ரைலா ஒடிங்கா இந்தியாவில் கேரளாவில் மருத்துவ சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றையதினம் உயிரிழந்துள்ளதுடன் அவரின் உடல் கென்யாவுக்கு கொண்டு செல்லப்பட உள்ளது. 
ரைலா ஒடிங்காவுக்கு எத்தியோப்பிய பிரதமர் அபி அகமது உட்பட அரசியல்வாதிகள் மற்றும் பிற தலைவர்கள் தங்கள் இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
இவர் 2008 முதல் 2013ஆம் ஆண்டு வரை கென்யாவின் பிரதமராக செயல்பட்டுள்ளார். அவர் 1992 முதல் 2013 வரை லங்காட்டா தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக  இருந்தார். மேலும் கென்யாவில் நீண்ட காலம் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த அவர், ஐந்து முறை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட்டு தோல்வியடைந்தார். ஒவ்வொரு முறையும் அவர் முடிவுகளை நிராகரித்தோடு, வெற்றி தன்னிடமிருந்து திருடப்பட்டதாகக் குறிப்பிட்டார்.
 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version