இலங்கை
சுற்றுலாப் பேருந்து மோதி மீன் வியாபாரி உயிரிழப்பு; அல்லைப்பிட்டியில் சோகம்
சுற்றுலாப் பேருந்து மோதி மீன் வியாபாரி உயிரிழப்பு; அல்லைப்பிட்டியில் சோகம்
தென்னிலங்கையில் இருந்து யாழ்ப்பாணத்துக்குச் சுற்றுலா வந்தவர்களின் பேருந்து மோதி மீன் வியாபாரியொருவர் நேற்று உயிரிழந்தார். அல்லைப்பிட்டியைச் சேர்ந்த கண்ணதாஸ் பிரேமதாசன் (வயது-61) எனும் மீன் வியாபாரியே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
யாழ்ப்பாணத்தில் இருந்து நயினாதீவு நோக்கி பயணித்த சொகுசுப் பேருந்து, யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை வீதியில், அல்லைப்பிட்டி சந்திக்கு அருகாகாகப் பயணித்த மோட்டார் சைக்கிளை மோதியதைத் தொடர்ந்தே இந்த விபத்து சம்பவித்துள்ளது.
விபத்தில் குறித்த நபர் படுகாயமடைந்த நிலையில், அவர் உடனடியாக மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட போதிலும், அவர் மேலதிக சிகிச்சையின் போது உயிரிழந்தார். இறப்பு விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமச்சிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.