சினிமா
சூர்யா கல்யாணத்தப்போ.. அம்மா சொன்ன வார்த்தையை மறக்கவே மாட்டேன்.! சிவகுமார் ஓபன்டாக்.!
சூர்யா கல்யாணத்தப்போ.. அம்மா சொன்ன வார்த்தையை மறக்கவே மாட்டேன்.! சிவகுமார் ஓபன்டாக்.!
தமிழ் சினிமாவின் அடையாளமான நடிகர் சிவகுமார், சமீபத்தில் ஒரு நேர்காணலில் கலந்துகொண்டு, தனது குடும்ப அனுபவங்கள், மகன்கள் சூர்யா, கார்த்தி ஆகியோரது திருமண வாழ்க்கை, மற்றும் ஜெயலலிதா அவர்களுடன் நடந்த ஒரு சம்பவம் குறித்து பேசினார்.அவர் கூறிய சில வார்த்தைகள் இன்று சமூக வலைத்தளங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகின்றன. “சூர்யா கல்யாணத்துக்காக நானும் என் பொண்ணும், கார்த்தியும் சேர்ந்து ஜெயலலிதா அம்மாவை சந்திக்கப் போனோம். அப்போ அம்மா சொன்னது இன்னும் என் மனசுல ஒட்டிக்கிடக்குது…” என்று தனது உரையை தொடங்கிய சிவகுமார், அந்த நேர்காணல் முழுக்க அவரது வாழ்க்கையின் முக்கியமான பக்கங்கள் குறித்துப் பேசியிருந்தார்.சிவகுமார் அம்மா குறித்து கூறியதாவது, “அவங்க என்ன சொன்னாங்கனா, வீட்டில் ஒரு லவ் மாரேஜ் ஓகே… அத ஒன்னும் பண்ண முடியாது. நீயாவது உங்க அம்மாவை சந்தோசப்படுத்துற மாதிரி உங்க ஜாதில பொண்ணை பார்த்து கல்யாணம் பண்ணிக்கடா” என்று கார்த்தியைப் பார்த்துக் கூறினார். இந்த நேர்காணல் தற்பொழுது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.