இலங்கை

தமிழர் பகுதியொன்றில் இளைஞர்கள் செய்த மோசமான செயல் ; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

Published

on

தமிழர் பகுதியொன்றில் இளைஞர்கள் செய்த மோசமான செயல் ; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

மட்டக்களப்பு புன்னைச்சோலை பகுதியில் ஒருவரை அச்சுறுத்தி கப்பம் பெற முயற்சித்த இரண்டு இளைஞர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களான இளைஞர்களை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியப் போது, அவர்களை எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisement

புன்னைச்சோலை பகுதியிலுள்ள ஒருவரின் சமூக வலைதளங்களில் ஊடுறுவிய குறித்த இரண்டு இளைஞர்களும், அவற்றை தவறாக சித்தரித்து பகிரவுள்ளதாக அச்சுறுத்தியுள்ளனர்.

அவ்வாறு செய்யாதிருப்பதற்கு 70 ஆயிரம் ரூபாய் கப்பம் வழங்க வேண்டும் எனவும் அச்சுறுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து, கப்பம் வழங்குவதாக தெரிவித்து, குறித்த இருவரையும் வரவழைத்த, பாதிக்கப்பட்டவர், அவர்களை பிடித்து பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.

Advertisement

புன்னைச்சோலை பகுதியை சேர்ந்த 19 மற்றும் 24 வயதான இரண்டு இளைஞர்களே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version