தொழில்நுட்பம்
தீபாவளி மெகா சேல்: நம்ப முடியாத விலையில் ஐபோன், சாம்சங், பிக்சல், ஓப்போ ஸ்மார்ட்போன்கள்!
தீபாவளி மெகா சேல்: நம்ப முடியாத விலையில் ஐபோன், சாம்சங், பிக்சல், ஓப்போ ஸ்மார்ட்போன்கள்!
தீபாவளி பண்டிகை நெருங்கிவிட்ட நிலையில், ஃப்ளிப்கார்ட் மற்றும் அமேசானில் 2025-ம் ஆண்டுக்கான பண்டிகைக்கால விற்பனையானது (Festive Sales) ஸ்மார்ட்போன் பிரியர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. தொழில்நுட்ப ஆர்வலர்கள் தங்கள் சாதனங்களை அப்டேட் செய்ய இதுவே சரியான நேரம். ஆப்பிள் (Apple), சாம்சங் (Samsung), கூகுள் (Google) உள்ளிட்ட முன்னணி பிராண்ட்களின் பிரபலமான மாடல் ஸ்மார்ட் போன்கள் பெரும் தள்ளுபடி, கேஷ்பேக் மற்றும் சிறப்பு சலுகைகளுடன் குவிந்துள்ளன.பிரீமியம் ஸ்மார்ட்போன் ஆஃபர்கள்: ஆப்பிள் மற்றும் சாம்சங் மாடல்கள்!ஐபோன்-16: ஆஃபர் விலையில் பிரீமியம் அனுபவம். ஆப்பிளின் புதிய ஐபோன் 16 (128GB) மாடலின் அசல் விலை ரூ.79,900. ஆனால், இந்த தீபாவளி விற்பனையில் வெறும் ரூ.66,900-க்கு கிடைக்கிறது. மேலும், உங்க பழைய போனை எக்ஸ்சேஞ்ச் செய்து கொண்டால் ரூ.56,750 வரை எக்ஸ்சேஞ்ச் சலுகையும், வங்கிச் சலுகைகள் மூலம் கூடுதல் தள்ளுபடியும் பெறலாம்.சாம்சங் கேலக்ஸி S24 5ஜி: சாம்சங்கின் முதன்மை மாடலான கேலக்ஸி S24 5ஜி-யின் அசல் விலை ரூ.79,999-லிருந்து, தற்போது ரூ.47,428 என்ற விலையில் கிடைக்கிறது. அத்துடன், ரூ.44,550 வரை எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடி, கேஷ்பேக், நோ-காஸ்ட் இ.எம்.ஐ. போன்ற கூடுதல் சேமிப்புகளும் உள்ளன. சாம்சங் கேலக்ஸி Z போல்ட் 7 5ஜி: ஃபோல்டிங் ஃபோன் பிரியர்களுக்காக, கேலக்ஸி Z Fold 7 5ஜி (அசல் விலை ரூ.1,74,999) தற்போது ரூ.1,62,999-க்கு கிடைக்கிறது.பலமான செயல்திறன்: குறைவான விலையில் அதிக சக்தி!ஐபோன்-15: 128GB, Black மாடல் இப்போது வெறும் ரூ.47,999-க்கு வாங்கலாம் (அசல் விலை ரூ.69,900). 48MP கேமரா, 2x ஆப்டிகல் டெலிஃபோட்டோ மற்றும் சக்திவாய்ந்த A16 Bionic சிப் கொண்ட இந்த மாடல், குறைவான விலையில் சிறந்த சாய்ஸ்.சாம்சங் கேலக்ஸி S24 FE: ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 மூலம் இயங்கும் கேலக்ஸி S24 FE, அதன் அறிமுக விலையான ரூ.59,999-ல் இருந்து பாதியாக குறைந்து ரூ.30,999-க்கு கிடைக்கிறது. இதற்கு ரூ.29,300 வரை எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடியும் உண்டு.போக்கோ F7 5ஜி: பவர் ஹவுஸாக உள்ள இந்த போனில் 7550mAh சிலிக்கான்-கார்பன் பேட்டரி மற்றும் ஸ்னாப்டிராகன் 8s ஜென் 4 பிராசஸர் உள்ளது. இது 90W ஃபாஸ்ட் சார்ஜிங் மூலம் 85 நிமிடங்களில் 100% சார்ஜ் ஏறும். ரூ.31,999 விலையில் அறிமுகமான இந்த போன், 9% தள்ளுபடியுடன் ரூ.28,999-க்கு கிடைக்கிறது.நத்திங் போன் 3: ரூ.84,999-க்கு அறிமுகமான இந்த ஃபோன், தற்போது ரூ.46,399-க்கு அதிரடி சலுகையுடன் கிடைக்கிறது.பட்ஜெட் மற்றும் மிடில்-ரேஞ்ச் மாடல்கள்:மோட்டோரோலா எட்ஜ் 60 ப்யூஷன்: கர்வ்டு pOLED டிஸ்ப்ளே மற்றும் பேட்டரி ஆயுள் கொண்ட இந்த ஸ்டைலான மிட்-ரேஞ்ச் ஃபோன் ரூ.20,999-க்கு கிடைக்கிறது. சி.எம்.எஃப் போன் 2 ப்ரோ, அடிப்படை ஸ்மார்ட்போன் தேவைகளுக்காக ரூ.24,999-ல் இருந்து ரூ.18,999-க்கு குறைக்கப்பட்டுள்ளது. ஓப்போ K13x 5G: ரூ.10,000-க்குக் குறைவான விலையில் 5G போன் தேடும் வாடிக்கையாளர்களுக்காக, இதன் விலை ரூ.9,999 ஆகக் குறைந்துள்ளது. ஓப்போ K13 5G (7000mAh பேட்டரி) ரூ.15,499-க்கு கிடைக்கிறது. ஓப்போ K13 Turbo Series 5G ரூ.19,999-ல் இருந்து தொடங்குகிறது.தீபாவளியை முன்னிட்டு, BOBCARD Limited பெரிய பண்டிகை போனஸை அறிவித்துள்ளது. வாடிக்கையாளர்கள் ரிலையன்ஸ் டிஜிட்டல், க்ரோமா, ஜியோமார்ட், எல்.ஜி, சாம்சங், சோனி உள்ளிட்ட முன்னணி கடைகளில் ஷாப்பிங் செய்யும்போது, தங்கள் BOBCARD கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி, 27.5% வரை தள்ளுபடி மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பொருட்களுக்கு ரூ.50,000 வரை கேஷ்பேக் பலன்களைப் பெறலாம்.ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்கள், டிவிகள் முதல் வீட்டு உபயோகப் பொருட்கள் வரை இந்தச் சலுகைகள் உண்டு. இந்த சலுகைகள் 2025-ம் ஆண்டு இறுதி வரை செல்லுபடியாகும். எனவே, இந்த தீபாவளிப் பண்டிகைக் காலத்தில் உங்க கனவு கேஜெட்டுகளை மலிவான விலையில் வாங்கி மகிழ பொன்னான வாய்ப்பு.