இலங்கை
தொடர் ஏறுமுகத்தில் தங்க விலை
தொடர் ஏறுமுகத்தில் தங்க விலை
தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில் நேற்றும் தங்கத்தின் விலை 10 ஆயிரம் ரூபாவால் அதிகரித்துள்ளது என்றுஇலங்கை தங்கநகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நேற்றுமுன்தினம் மாலை வரை 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 3 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாவாகக் காணப்பட்டநிலையில், நேற்று 3 இலட்சத்து 90 ஆயிரம் ரூபாவாக விற்பனை செய்யப்பட்டது என்று அந்தச் சங்கம் தெரிவித்துள்ளது. அதேநேரம். 22 கரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை நேற்று 3 இலட்சத்து 58 ஆயிரம் ரூபாவாகக் காணப்பட்டது என்றும் அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.