இலங்கை

மூன்று அமைச்சுக்களின் செயலாளர்கள் நியமனங்களுக்கு அனுமதி!

Published

on

மூன்று அமைச்சுக்களின் செயலாளர்கள் நியமனங்களுக்கு அனுமதி!

அமைச்சுக்களின் செயலாளர்கள் மூவரின் நியமனங்களுக்கு பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழுவினால் அண்மையில் அனுமதி வழங்கப்பட்டது. 

அதற்கமைய, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சின் செயலாளராக டீ.டபிள்யூ.ஆர்.பீ. செனவிரத்ன, பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளராக எஸ். ஆலோகபண்டார மற்றும் கடற்றொழில், நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் செயலாளராக பி.கே.கே.கே. ஜினதாச ஆகியோரின் நியமனங்களுக்கு  உயர் பதவிகள் பற்றிய குழுவினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Advertisement

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் இடம்பெற்ற இந்தக் குழுக் கூட்டத்தில் குழுவின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version