இலங்கை

யாழில் தகரம் விழுந்ததால் பறிபோன உயிர்

Published

on

யாழில் தகரம் விழுந்ததால் பறிபோன உயிர்

  யாழில் தகரங்கள் மேலே விழுந்ததால் மயக்கமுற்ற நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபர் ஒருவர் நேற்றையதினம் (16) உயிரிழந்தார்.

சம்பவத்தில் மயிலிட்டி வடக்கு, காங்கேசன்துறை பகுதியைச் சேர்ந்த 36 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

Advertisement

உயிரிழந்தவர் யாழில் உள்ள ஒரு ஹாட்வெயார் கடையில் பணிபுரிந்து வருகின்றார்.

இந்நிலையில் 14ஆம் திகதி கடையில் அடுக்கப்பட்டிருந்த தகரங்களை நகர்த்துவதற்கு முயற்சித்த போது தகரங்கள் அவர் மீது விழுந்ததில் மயக்கமுற்றார்.

இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

Advertisement

சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version