இலங்கை

யாழில் பல்பொருள் விற்பனை நிலையத்தில் தீ விபத்து.!

Published

on

யாழில் பல்பொருள் விற்பனை நிலையத்தில் தீ விபத்து.!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று வடக்கு பகுதியில் நேற்இரவு பல்பொருள் விற்பனை கடையின் உட்பகுதியில் தீ விபத்து ஏற்பட்டதால் தளபாடங்கள் மற்றும் சரக்குப்பொருட்கள் என்பன சேதமாகியுள்ளன.

கடை உரிமையாளர் நேற்றையதினம் கடையினை பூட்டிவிட்டு சென்று, மீண்டும் இன்று காலை வியாபார நடவடிக்கைகளுக்காக கடையினை திறந்தபோது கடையின் உட்பகுதி முழுவதும் எரிந்து உள்ளதை அவதானித்து உள்ளார். 

Advertisement

அதன்பின் குறித்த சம்பவம் தொடர்பாக முறைப்பாட்டினை மருதங்கேணி பொலிஸாரிடம் முறைப்பாட்டைப் பதிவு செய்யததுடன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version