இலங்கை
யாழ். பெண் விபத்தில் பலி!
யாழ். பெண் விபத்தில் பலி!
யாழ்ப்பாணம் ஏழாலையை சேர்ந்த திருமணமான இளம் பெண் வாகன விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு சென்று கொண்டிருந்த போது அவர்கள் பயணித்த வாகனம் இன்று அதிகாலை 3:00 மணியவில் அனுராதபுரதிற்கு அண்மையில் விபத்துக்குள்ளானதாக கூறப்படுகின்றது. விபத்தில் யாழ்ப்பாணம் ஏழாலை பகுதியைச் சேர்ந்த 25 என்ற இளம் குடும்பப் பெண்ணே உயிரிழந்துள்ளார். உயிரிழந்த பெண் திருமணம் செய்து ஒரு வருடமான நிலையில் இந்த துயரச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகின்றது.