இந்தியா
ரயில் பயணிகளின் சுகாதாரத்திற்காக ‘உறைபோட்ட போர்வைகள்’ – ரயில்வே முன்னோட்டத் திட்டம் தொடக்கம்
ரயில் பயணிகளின் சுகாதாரத்திற்காக ‘உறைபோட்ட போர்வைகள்’ – ரயில்வே முன்னோட்டத் திட்டம் தொடக்கம்
Indian Railways AC coach blanket service: மேம்பட்ட சுகாதாரத்தை உறுதி செய்யவும், பாதுகாப்பான, தூய்மையான மற்றும் வசதியான பயண அனுபவத்தை உறுதிப்படுத்தவும், ரயில்வே அமைச்சகம் ஏசி பெட்டிகளில் பயணம் செய்யும் பயணிகளுக்கு உறைபோட்ட போர்வைகளை வழங்குவதற்கான முன்னோட்டத் திட்டத்தை தொடங்கியுள்ளது.ஆங்கிலத்தில் படிக்க:ரயில்களில் உறைபோட்ட போர்வைகள் ஏன்?ரயில்களில் வழங்கப்படும் போர்வைகள், படுக்கை விரிப்புகள் அல்லது தலையணை உறைகளைப் போல ஒவ்வொரு பயணத்திற்குப் பிறகும் துவைக்கப்படுவதில்லை. அவை மாதத்திற்கு ஒரு முறை அல்லது இருமுறை மட்டுமே சுத்தம் செய்யப்படுகின்றன. இந்தக் சுகாதாரக் கவலையை நிவர்த்தி செய்வதற்கும், வசதியான பயன்பாட்டை உறுதி செய்வதற்கும், ரயில்வே தற்போது ஒவ்வொரு போர்வையையும் பயன்படுத்த உறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.தற்போது, இந்த உறைபோட்ட போர்வைகள் ஒரு ரயிலில் சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. வரும் நாட்களில், இந்தத் திட்டம் மற்ற ரயில்களுக்கும் நீட்டிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ரயில்வே அமைச்சர் , ஜெய்ப்பூர் – அசர்வா விரைவு ரயிலின் அனைத்து ஏசி வகுப்புகளிலும் இந்த அச்சிடப்பட்ட போர்வைகளை வழங்கும் புதிய நடைமுறையைத் தொடங்கி வியாழக்கிழமை வைத்தார்.தேசிய ரயில்வே வெளியிட்ட அறிக்கையில், “பயணிகளின் வசதியை மேலும் மேம்படுத்தும் வகையில், ரயில்வே அமைச்சர் ஜெய்ப்பூர் – அசர்வா விரைவு ரயிலின் அனைத்து ஏசி வகுப்புகளிலும் சுகாதாரம், சீரான தன்மை மற்றும் சிறந்த பயண அனுபவத்தை ஊக்குவிக்கும் வகையில், அச்சிடப்பட்ட போர்வைகளை வழங்கும் புதிய நடைமுறையைத் தொடங்கி வைத்தார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.ராஜஸ்தானில் ரயில்வே உள்கட்டமைப்பு2025–26 மத்திய நிதிநிலை அறிக்கையில், ராஜஸ்தானில் ரயில்வே உள்கட்டமைப்புப் பணிகளுக்காக ரூ.9,960 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அம்ரித் பாரத் நிலையத் திட்டத்தின் கீழ், 85 நிலையங்கள் மறுசீரமைக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் 8 நிலையங்கள் ஏற்கனவே இந்த ஆண்டு தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. இந்த மாநிலத்தில் இப்போது 12 வந்தே பாரத் ரயில் சேவைகள் இயக்கப்படுகின்றன.“புதிய ரயில்களை அறிமுகப்படுத்துதல், புதிய நிலையங்களைக் கட்டுதல், புதிய தண்டவாளங்கள் அமைத்தல், மின்மயமாக்கலை நிறைவு செய்தல் மற்றும் நவீன பராமரிப்பு கிடங்குகளை உருவாக்குதல் என ரயில்வே மேம்பாடு பல முனைகளில் முன்னேறி வருகிறது. இருப்பினும், பயணிகளின் வாழ்க்கையில் ஒரு அர்த்தமுள்ள மாற்றத்தைக் கொண்டுவருவதே முக்கியக் குறிக்கோளாக உள்ளது” என்று ரயில்வே அமைச்சர் வைஷ்ணவ் கூறினார்.