சினிமா
ரிலீஸுக்கு முன்பே இத்தனை கோடிகள் லாபம் பார்த்த டியூட்!! பிரதீப்புக்கு எங்கயோ மச்சம்..
ரிலீஸுக்கு முன்பே இத்தனை கோடிகள் லாபம் பார்த்த டியூட்!! பிரதீப்புக்கு எங்கயோ மச்சம்..
இயக்குநராக கோமாளி என்ற படத்தை இயக்கி மிகப்பெரியளவில் பிரபலமானவர் பிரதீப் ரங்கநாதன். அப்படத்திற்கு பின் லவ் டுடே, டிராகன் என இரு படங்களில் நடித்து மிகப்பெரிய ஹிட் படத்தை கொடுத்தார். இரு படங்களில் கிட்டத்தட்ட 100 கோடி வரை பாக்ஸ் ஆபிஸ் பெற்று மெகா ப்ளாக் பஸ்டர் படமாகியது.இதனை தொடர்ந்து இயக்குநர் கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் டியூட் என்ற படத்தில் நடித்து இன்று அக்டோபர் 17 ஆம் தேதி ரிலீஸாகியுள்ளது. இப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக நடிகை மமிதா பைஜு நடித்துள்ளார்.மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தின் பிரமோஷனைவிட பிரதீப்பின் மார்க்கெட் உச்சக்கட்டமாக எகிறியிருக்கிறது. இந்நிலையில், டியூட் படத்தின் தயாரிப்பு நிறுவனமான மைத்ரீ மூவிஸ் நிறுவனம் தெரிவித்துள்ள தகவல் தற்போது பெரியளவில் பேசப்பட்டு வருகிறது.அதில், டியூட் படம் தியேட்டரில் ரிலீஸாவதற்கு முன்பே எங்களுக்கு ரூபாய் 35 கோடிகள் வரை லாபம் கொடுத்துவிட்டது. படத்தை நாங்கள் தமிழ்நாட்டு ரசிகர்களை கவனத்தில் கொண்டுதான் முதலில் தயாரித்தோம்.படம் பார்த்தப்பின் தெலுங்கு ஆடியன்ஸுக்கும் இப்படம் பிடிக்கும் என்று நம்புகிறோம். படத்தை ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் நாங்களே ரிலீஸ் செய்கிறோம். தமிழ்நாட்டில் டியூட் படத்தை ஏ ஜி எஸ் நிறுவனம் ரிலீஸ் செய்கிறது என்று கூறியிருக்கிறார்கள்.