இலங்கை
47 கிலோ கஞ்சாவுடன் பூநகரியில் இருவர் கைது!
47 கிலோ கஞ்சாவுடன் பூநகரியில் இருவர் கைது!
47 கிலோ கேரளக் கஞ்சாவை உடை மையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் இருவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடத்தலுக்குப் பயன்படுத்தியதாகக் கருதப்படும் வாகனம் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. விசேட அதிரடிப்படையினருக்குப் கிடைத்த இரகசியத்தகவலுக்கு அமைய நேற்றுமுன்தினம் புதன்கிழமை இரவு யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த வாகனம் ஒன்று பூநகரிப் பகுதியில் வழிமறிக்கப்பட்டு சோதனையிடப்பட்டது.
அதில் 22 பொதிகளில் பொதிசெய்யப்பட்ட 47 கிலோ 200 கிராம் கேரளக் கஞ்சா கைப்பற்றப்பட்டது. சந்தேகநபர்கள் விசாரணையின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்தப்படுவார்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர்.