இலங்கை
இஷாரா செவ்வந்திக்கு அடைக்கலம் கொடுத்த மேலும் மூவர் கைது
இஷாரா செவ்வந்திக்கு அடைக்கலம் கொடுத்த மேலும் மூவர் கைது
கனேமுல சஞ்சீவ கொலைசந்தேக நபரான இஷாரா செவ்வந்திக்கு அடைக்கலம் கொடுத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ், ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.
பொலிஸ் கான்ஸ்டபிள், கான்ஸ்டபிளின் மனைவியின் தாய் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவைச் சேர்ந்தவரென கருதப்படும் “மாத்தறை ஷான்” என்பவரின் நெருங்கிய நண்பரொருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கனேமுல சஞ்சீவ கொலையை அடுத்து நாட்டைவீட்டு தப்பியோடிய இஷாரா செவ்வந்தி நேபாளத்தில் மறைந்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்துரப்படு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.