இலங்கை

இஷாரா செவ்வந்தியின் அழகுக்கு இதுதான் காரணம் ; விசாரணையில் வெளிவரும் தகவல்கள்

Published

on

இஷாரா செவ்வந்தியின் அழகுக்கு இதுதான் காரணம் ; விசாரணையில் வெளிவரும் தகவல்கள்

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை வழக்கின் முக்கிய சூத்திரதாரியான இஷாரா செவ்வந்தி கொழும்பு நீதவான் நீதிமன்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தின் பின்னர் தனது தோற்றத்தை மாற்றிக்கொண்டதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.

மேலும், நேபாளத்தில் அவருடன் கைது செய்யப்பட்ட தக்சி என்ற தமிழ் பெண்ணை போல் தனது தோற்றத்தை மாற்றிக்கொள்ள நீண்ட நாட்களாக அங்குள்ள அழகு நிலையங்களுக்கும் சென்றிருந்ததாக கூறப்படுகிறது.

Advertisement

வெளிநாட்டில் வசித்து வரும் பாதாள உலகத் தலைவர் ஒருவர் ஒரு மாத காலம் வரை செவ்வந்தி தங்குவதற்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

 தனது பாதாள கும்பல் உறுப்பினர்களை பயன்படுத்தி அவர் இந்த உதவிகளை செவ்வந்திக்கு வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.  குறித்த பாதாள உலகத் தலைவர், கெஹெல்பத்தர பத்மேவின் நெருங்கிய நண்பர் என்பது விசாரணைகளில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

நேபாளத்தில் வசிக்கும் போது, ​​தனது தோற்றத்தில் அதிக கவனம் செலுத்தி வருவதாக செவ்வந்தி கூறியுள்ளார். அழகு நிலையங்களில் தனது பெரும்பாலான நேரத்தைச்  செலவிட்டதாகவும் கூறியுள்ளார்.

Advertisement

தனது தோற்றத்தில் காணக்கூடிய முன்னேற்றங்களைக் கவனித்த பிறகு, அழகு சிகிச்சைகளுக்கு “அடிமையாக” மாறியதாக அவர் ஒப்புக்கொண்டுள்ளார். மேலும் பல மாதங்களாக தனது தோற்றம் அடையாளம் காண முடியாத அளவுக்கு மாறிவிட்டதை தான் உணர்ந்ததாக இஷாரா தெரிவித்துள்ளார்.

 விசாரணையின் போது, ​​காத்மாண்டுவில் கம்பஹா பாபா, ஜே.கே. பாய் மற்றும் ஜம்புகஸ்முல்லா பாபி ஆகியோரை சந்தித்ததாக விசாரணை அதிகாரிகளிடம் அவர் கூறியுள்ளார்.  மேலும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சுரேஷ் மற்றும், தக்சியையும் அங்கு சந்தித்ததாகவும் கூறியுள்ளார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version