இந்தியா
கச்சதீவை மீட்பதற்கு ஹரிணியிடம் பேசுக; பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் வலியுறுத்து!
கச்சதீவை மீட்பதற்கு ஹரிணியிடம் பேசுக; பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் வலியுறுத்து!
கச்சதீவை மீட்பது தொடர்பிலும், தமிழக மீனவர்களின் விடுதலை தொடர்பிலும் பிரதமர் ஹரிணி அமரசூரியவுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று, இந்தியப் பிரதமர் மோடியை தமிழக முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
பிரதமர் ஹரிணி அமரசூரிய மூன்று நாள்கள் பயணமாக இன்று இந்தியாவுக்குச் சென்றுள்ளார். இந்திய வெளிவிவகார அமைச்சருடனான சந்திப்பைத் தொடர்ந்து, அவர் இந்தியப் பிரதமர் மோடியையும் சந்தித்துக் கலந்துரையாடல் நடத்தவுள்ளார். இவ்வாறான நிலையிலேயே, கச்சதீவு மீட்புத்தொடர்பில் ஹரிணியுடன் பேசுமாறு பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார்.
இது தொடர்பில் முதல்வர் ஸ்டாலின் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் உள்ளதாவது:-
இலங்கையின் பிரதமர் ஹரிணி, மூன்று நாள்கள் பயணமாக இந்தியாவுக்கு வந்துள்ளதை, தமிழக மீனவர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் மிகச்சிறந்த சந்தர்ப்பமாக இதனை இந்திய மத்திய அரசு பயன்படுத்தவேண்டும். இந்திய மீனவர்களின் மீன்பிடி உரிமையை உறுதிப்படுத்துவதற்கு, பிரதமர் ஹரிணியின் இந்தியப் பயணம் நல்லதொரு சந்தர்ப்பம். இலங்கையின் சிறைச்சாலைகளில் தற்போது 76 இந்திய மீனவர்கள் உள்ளனர். 250 படகுகள் இலங்கையால் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்தப் பிரச்சினைக்கு விரைவான முற்றுப்புள்ளி அவசியம் தேவை – என்றுள்ளது.