இலங்கை

கிளப் வசந்த கொலை – குற்றவாளி லொக்கு பெட்டியின் உதவியாளர் கைது

Published

on

கிளப் வசந்த கொலை – குற்றவாளி லொக்கு பெட்டியின் உதவியாளர் கைது

கிளப் வசந்த படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளியான ‘லொக்கு பெட்டி’ என அழைக்கப்படும் சுஜீவ ருவன் குமாரவின் முக்கிய உதவியாளரொருவர் அம்பலாங்கொடையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

அம்பலாங்கொடை பகுதியிலுள்ள விகாரையொன்றில் பூசகராக செயற்பட்ட ஒருவரே பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளியான ‘லொக்கு பெட்டி’ என அழைக்கப்படும் சுஜீவ ருவன் குமாரவின் முக்கிய உதவியாளர் என அறியப்படும் பூசகர் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் அம்பலாங்கொடை கந்தர பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

க்ளப் வசந்த படுகொலை செய்யப்பட்டதன் பின்னர் ‘லொக்கு பெட்டி’ என அழைக்கப்படும் சுஜீவ ருவன் குமாரவின் வங்கி கணக்குக்கு 33 கோடி ரூபாவுக்கும் அதிகளவான தொகை வரவு வைக்கப்பட்டிருந்த மை விசாரணையில் தெரியவந்துள்ளது.

‘லொக்கு பெட்டியின் வங்கி கணக்கிலிருந்த பணத்தை கைதான குறித்த பூசகரே நிர்வாகம் செய்து வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். லொக்கு பெட்டியின் உதவியாளர்கள் 36 பேர் போதைப்பொருள் கடத்தலூடாக ஈட்டிய 33 கோடியே 66 இலட்சம் ரூபா குறித்த சந்தேகநபரின் வங்கி கணக்கில் வைப்பிலிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

லொக்கு பெட்டியின் ஆலோசனைக்கமைய சந்தேகநபரின் ஊடாக குறித்த பணம் பல்வேறு கடத்தல்கள் மற்றும் குற்றச்செயல்களுக்கா மேலும் மூவருக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

அத்தோடு கைதான சந்தேகபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 3 நாள் தடுப்புக்காவல் உத்தரவின் பேரில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக விசாரணை அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

லொக்கு பெட்டி தற்போது பூஸா அதிபாதுகாப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அவரிடமிருந்து அண்மையில் கைபேசி கைப்பற்றப்பட்டதுடன், குறித்த சந்தர்ப்பத்தில் லொக்கு பெட்டியினால் அந்த கைபேசி அழிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

லங்கா4 (Lanka4)

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version