இலங்கை

சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி மதுபோதையில் பஸ்ஸை செலுத்திய நபர்!

Published

on

சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி மதுபோதையில் பஸ்ஸை செலுத்திய நபர்!

 அநுராதபுரத்தில்  சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி மதுபோதையில் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பஸ் சாரதியை விளக்கமறியலில் வைக்குமாறு கெப்பெத்திகொல்லெவ நீதவான் நிமேஷா பட்டபெதிகே உத்தரவிட்டுள்ளார்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பஸ் சாரதி மீரிகம பூகொடை பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஆவார்.

Advertisement

பதவிய பொலிஸ் போக்குவரத்து பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் அநுராதபுரத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார்.

வைத்திய பரிசோதனையில் சந்தேக நபரான பஸ் சாரதி மதுபோதையில் இருப்பதாக தெரியவந்துள்ளது.

இதனையடுத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபரிடம் சாரதி அனுமதிப்பத்திரம் இல்லை எனவும் தெரியவந்துள்ளது.

Advertisement

கைதுசெய்யப்பட்ட பஸ் சாரதி கெப்பெத்திகொல்லெவ நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.    

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version