இலங்கை

தகரக் குவியல் விழந்து குடும்பத்தலைவர் சாவு!

Published

on

தகரக் குவியல் விழந்து குடும்பத்தலைவர் சாவு!

யாழ்ப்பாணம் நகரப்பகுதிக்கு அருகாக உள்ள இரும்புக் கடையொன்றில் தகரங்களை அகற்றியபோது. தகரக் குவியுல் கழுத்துப் பகுதியில் வீழ்ந்ததில் படுகாயமடைந்த நபர் நேற்று உயிரிழந்தார்.

மயிலிட்டி வடக்கு காங்கேசன்துறைப்பகுதியைச் சேர்ந்த ஹரிகரன் ராஜன் டலஸ்குமார் (வயது-36) என்ற குடும்பத் தலைவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

Advertisement

கடந்த 14ஆம் திகதி இரவு படுகாயமடைந்த அவர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், மேலதிக சிகிச்சையின்போது நேற்று உயிரிழந்தார். இறப்பு விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமச்சிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version