பொழுதுபோக்கு
பிக்பாஸ் சீசன் 9: மாஸ்கை பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வம் இருக்கா? இல்லையா? விஜய் சேதுபதி கேள்வி
பிக்பாஸ் சீசன் 9: மாஸ்கை பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வம் இருக்கா? இல்லையா? விஜய் சேதுபதி கேள்வி
பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ் மட்டுமல்லாமல், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது. ரசிகர்களின் வரவேற்பை பெற்ற இந்த நிகழ்ச்சியை அந்தந்த மொழிகளில் உள்ள திரைப்பிரபலங்கள் தொகுத்து வழங்கி வருகின்றனர். தமிழில் தற்போது பிக்பாஸ் 9-வது சீசன் நடைபெற்று வருகிறது. இந்த சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்.பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 9-ல் போட்டியாளராக கலையரசன், வாட்டலர் மெலன் ஸ்டார் திவாகர், கம்ருதீன், வி.ஜே. பார்வதி, கனி, அரோரா, வினயா, வினோத், விக்ரம், சபரி, துஷார், ரம்யா ஜோ, நந்தினி உட்பட 20 பேர் கலந்து கொண்டனர். இதில் நந்தினி தன்னால் பிக்பாஸ் வீட்டில் இருக்க முடியாது என்று கூறிவிட்டு வெளியேறிவிட்டார். அதேபோன்று இயக்குநர் பிரவீன் காந்தி முதல் வார நாமினேஷனில் வெளியேறிவிட்டார்.தற்போது 18 போட்டியாளர்களுடன் பிக்பாஸ் நிகழ்ச்சி நடந்து வருகிறது. பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பிரச்சனை வெடிக்கிறது. எதற்கெடுத்தாலும் பிரச்சனை என்ற நிலையில் சென்று கொண்டிருக்கிறது. இதை பார்க்கும் ரசிகர்கள் இவர்கள் கண்டண்டிற்காகவே சண்டை போடுவதாக தோன்றுகிறது என்று இணையத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர்.இப்படி பிக்பாஸ் வீட்டில் நடக்கும் தேவையற்ற பிரச்சனைகளால் வெறுப்பான ரசிகர்களை தற்போது திவாகர் – வினோத் காம்போ உற்சாகப்படுத்தி வருகிறது. அதாவது, இவர்களும் சண்டைதான் போடுவார்கள் அந்த சண்டை ரசிகர்களால் ரசிக்கும்படியாக உள்ளது. இதனால், திவாகருக்கும் வினோத்திற்கும் ஃபாலோவர்ஸுகள் அதிகரித்து உள்ளனர்.அடுத்ததாக அரோரா தான் இப்போது பிக்பாஸ் வீட்டில் கண்டண்ட் கொடுத்து கொண்டு இருக்கிறார். துஷாருடன் இவர் செய்யும் சேட்டைகளை பார்த்த நெட்டிசன்கள் அரோராவை வறுத்தெடுத்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல், பிக்பாஸ் வீட்டில் டிசிப்ளின் இல்லை என்று துஷாரின் தலை பதவியும் பறிக்கப்பட்டது. இந்த வாரம் யார் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.பார்வதி, திவாகரை மக்கள் நாமினேட் செய்து வெளியே போக சொன்னாலும் பிக்பாஸ் தயரிப்பாளர்கள் விடமாட்டார்கள் என்றும் அவர்களால் தான் தற்போது பிக்பாஸ் ரேட்டிங் அதிகரித்து வருவதாகவும் ஒரு தரப்பினர் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தற்போது பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியின் 13-வது நாளின் முதல் ப்ரொமோ வெளியாகியுள்ளது.#Day13#Promo1 of #BiggBossTamilBigg Boss Tamil Season 9 – இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason9#OnnumePuriyala#BiggBossSeason9Tamil#BiggBoss9#BiggBossSeason9#VijaySethupathi#BiggBossTamil#BB9#BiggBossSeason9#VijayTV#VijayTelevisionpic.twitter.com/34tXS97cqMஅதில், நம்ம விளையாடுவதற்கு மாஸ் கொடுத்தா அந்த மாஸ்கை எடுக்கறதுலையும் பாக்ஸில் வைக்கறதுலயும் ஒரு ஆர்வம் இருக்கும். ஆனால், நம்மோடு விளையாடுபவர்களுக்கு ஒரு மாஸ்க் இருக்கும். அந்த மாஸ்க் என்ன தெரிஞ்சிக்கிறதுலையும் புரிஞ்சிக்கிறதுலையும் ஆர்வம் இருக்காணு தெரியல வாங்க பேசும்வோம் என்று விஜய் சேதுபதி சொல்வதுடன் இந்த ப்ரொமோ முடிவடைகிறது. இன்று விஜய் சேதுபதி போட்டியாளர்களை சந்தித்து ஒருவாரம் நடந்த பிரச்சனைகள் குறித்து பேசவுள்ள நிலையில் என்ன நடக்கப்போகிறது என ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.