இந்தியா
புதுச்சேரியில் மிதமான மழை: தீபாவளி பொருட்கள் வாங்க சென்ற பொதுமக்கள் கடும் அவதி
புதுச்சேரியில் மிதமான மழை: தீபாவளி பொருட்கள் வாங்க சென்ற பொதுமக்கள் கடும் அவதி
புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் நேற்று அதிகாலை முதல் 7.30 மணி வரை மிதமான மழை விட்டு விட்டு பெய்தபடி இருந்தது. அதன் பின்னர் வெயில் அடிக்கத் தொடங்கியது. பகல் முழுவதும் அவ்வப்போது வானில் கருமேகங்கள் திரண்டு குளிர்ந்த காற்று வீசியபடி இருந்தது. இரவு 7 மணிக்கு சாரல் மழை பெய்யத்தொடங்கியது.தொடர்ந்து இரவு 9 மணிக்கு மேல் பலத்த மழை பெய்தது. இந்த மழை சுமார் 45 நிமிடம் நீடித்தது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொருட்கள் வாங்க குடும்பத்துடன் கடைவீதிகளில் குவிந்த மக்கள் மழையில் நனைந்த படியும், சிலர் குடைகளை பிடித்த படியும், மழை அங்கி (ரெய்ன் கோட்) அணிந்தபடியும் வீடு திரும்பினர். மழையால் காந்தி வீதியில் இயங்கி வந்த தெருவோர கடை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அவதியடைந்தனர்.மேலும் இன்று காலையில் புதுச்சேரி மாநிலம் முழுவதும் மிதமான மழை பெய்து கொண்டிருக்கிறது வானிலை மேகமூட்டத்துடன் காணப்பட்டு இருள் சூழ்ந்துள்ளது இன்று விடியல் விடியற்காலை நடக்கும் வியாபாரங்கள் இந்த மழையால் பெரிதும் பாதிக்கப்பட்டது .பாபு ராஜேந்திரன் புதுச்சேரி