பொழுதுபோக்கு

பேண்ட் இல்ல, அண்டர்வேர் கழற்ற கூட நான் ரெடி; கேப்டனுடன் நடிக்க ஆர்வமாக வந்த பிரபல நடிகர்: இந்த காமெடி சூப்பர் ஹிட் தான்!

Published

on

பேண்ட் இல்ல, அண்டர்வேர் கழற்ற கூட நான் ரெடி; கேப்டனுடன் நடிக்க ஆர்வமாக வந்த பிரபல நடிகர்: இந்த காமெடி சூப்பர் ஹிட் தான்!

தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்களை கொடுத்த பாண்டியராஜன், கேப்டன் விஜயகாந்துடன், இணைந்து நடிப்பதற்காக, தன்னை தொடர்புகொண்டதையும், அதற்காக தான் சொன்ன பதில் குறித்தும் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். இயக்குனர் பாக்யராஜூவிடம் உதவியாளராக இருந்து, பிரபு – ரேவதி நடிப்பில் வெளியான கன்னிராசி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பாண்டியராஜன். அதன்பிறகு ஆண்பாவம் படத்தின் மூலம் இயக்குனர் மற்றும நடிகராக அவதாரம் எடுத்த இவர், மனைவி ரெடி, நெத்தியடி, கோபாலா கோபாலா கபடி கபடி உள்ளிட்ட படங்களை இயக்கி ஹீரோவாக நடித்துள்ளார். டபுளஸ் படத்தை பிரபுதேவா நடிப்பில் இயக்கியுள்ளார்.சிவாஜி கணேசன் உள்ளிட்ட மூத்த நடிகர்களுடன் இணைந்து வெற்றிப்படங்களில் நடித்துள்ள பாண்டியராஜன். பாட்டி சொல்லை தட்டாதே, வாய் கொழுப்பு, உள்ளிட்ட பல வெற்றிபடங்களில் மற்ற இயக்குனர்களின் இயக்கத்தில் நடித்துள்ளார். கடைசியாக கடந்த 2002-ம் ஆண்டு ஆண்டிப்பட்டி அரசம்பட்டி என்ற படத்தில் ஹீரோவாக நடித்திருந்த பாண்டியராஜன், அதன்பிறகு மற்ற நடிகர்களில படங்களில் முக்கிய கேரக்டரில் நடிக்க தொடங்கினார். அந்த வகையில் வெளியான வசீகரா, அன்புத்தொல்லை உள்ளிட்ட படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. இதில் கடந்த 2004-ம் ஆண்டு வெளியான எங்கள் அண்ணா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற பாண்டிராஜனின காமெடிக்கு பெரிய பாராட்டுக்கள் கிடைத்தது. கேப்டன் விஜயகாந்த், பிரபுதேவா, நமீதா, மணிவண்ணன், வடிவுக்கரசி உள்ளிட்ட பலர் நடித்திருந்த இநத படம் மலையாளத்தில் மம்முட்டி நடிப்பில் வெளியான தி ஃகானிக் பேச்சிலர் என்ற படத்தின் ரீமேக்காகும். இதில் பிரபுதேவா, வடிவேலு பாண்டியராஜ் ஆகியோர் காமினேஷனில் ந்த காமெடிகள் இன்றும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது குறித்து பேசிய பாண்டியராஜன், கேப்டன் அலுவலகத்தில் இருந்து என்னை போனில் அழைத்து, நீங்கள் நடிக்க வேண்டும் என்று கதை, என் கேரக்டர் எல்லாம் சொன்னார்கள். நானும் ஓகே சொன்னேன். அவர்க்ள போனை வைத்துவிட்டார்கள். நான் கேப்டனுடன் நடிக்க போகிறேம் என்ற மகிழ்ச்சியில் இருந்தேன். அடுத்த சில நிமிடங்களில் மீண்டும் போன் வந்தது. என்ன வாய்ப்பு போய்டுச்சா என்று நினைத்துக்கொணடே போனை எடுத்தேன்.அவர்கள் இந்த படத்தில் நீங்கள் பேண்ட் கழற்றுவது போன்ற காட்சி இருக்கிறது ஒகேவா என்ற கேட்டார்கள். பேண்ட் என்ன அண்டர்வேரு கூட கழற்றுவேன் என்ற சொன்னேன். படம் முடிந்து வெளியே போகும்போது கட்டிபிடித்து, எங்கள் நிறுனத்தில் குறைகள் இருந்தால் மனதில் வைத்துக்கொள்ள வேண்டாம் என்று கேப்டன் சொன்னாா என்ற பாண்டியராஜன் நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version