இலங்கை

போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த பணத்துடன் ஒருவர் கைது!

Published

on

போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த பணத்துடன் ஒருவர் கைது!

போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த 30,24,900 ரூபாய் பணத்தை வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

 கைது செய்யப்பட்ட நேரத்தில், சந்தேக நபரிடம் 2 கிராம் 300 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டது.

Advertisement

பொலன்னறுவை பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், நேற்று (17) மதியம் பொலன்னறுவை பொலிஸ் பிரிவின் பெந்திவெவ பகுதியில், மனம்பிட்டி மோப்ப நாய் பிரிவின் அதிகாரிகளுடன் இணைந்து நடத்தப்பட்ட சோதனையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

 சந்தேக நபர் பெந்திவெவ பகுதியைச் சேர்ந்த 28 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பாக பொலன்னறுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

லங்கா4 (Lanka4)

Advertisement

அனுசரணை

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version