சினிமா
ரூ. 10 கோடிலாம் இல்ல!! டியூட் பட முதல் நாள் வசூல் இத்தனை கோடியாம்…ஹாட்ரிக் அடிச்சிடுவாரோ..
ரூ. 10 கோடிலாம் இல்ல!! டியூட் பட முதல் நாள் வசூல் இத்தனை கோடியாம்…ஹாட்ரிக் அடிச்சிடுவாரோ..
இயக்குநராக கோமாளி என்ற படத்தை இயக்கி மிகப்பெரியளவில் பிரபலமானவர் பிரதீப் ரங்கநாதன். அப்படத்திற்கு பின் லவ் டுடே, டிராகன் என இரு படங்களில் நடித்து மிகப்பெரிய ஹிட் படத்தை கொடுத்தார். இரு படங்களில் கிட்டத்தட்ட 100 கோடி வரை பாக்ஸ் ஆபிஸ் பெற்று மெகா ப்ளாக் பஸ்டர் படமாகியது.இதனை தொடர்ந்து இயக்குநர் கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் டியூட் என்ற படத்தில் நடித்து அக்டோபர் 17 ஆம் தேதி ரிலீஸாகியுள்ளது. இப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக நடிகை மமிதா பைஜு நடித்துள்ளார்.படம் மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து பாசிட்டிவ் விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், டியூட் படம் வெளியான முதல் நாளில் உலகளவில் எவ்வளவு பாக்ஸ் ஆபிஸ் பெற்றுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.முதல் நாளில் மட்டும் ரூ. 22 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது.படம் ரூ. 27 கோடி பட்ஜெட்டில் உருவாகி முதல் நாளே ரூ. 20 கோடியை அள்ளியது தான் படத்தின் மிகப்பெரிய வெற்றியாக கூறப்படுகிறது. ஒரு வாரத்தில் 70 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலிக்கும் என்றும் கூறப்பட்டு வருகிறது.