இலங்கை

வரலாற்று பிரசித்தி பெற்ற நயினாதீவில் மக்கள் கண்ட காட்சி; வியப்பில் ஆரவாரம்

Published

on

வரலாற்று பிரசித்தி பெற்ற நயினாதீவில் மக்கள் கண்ட காட்சி; வியப்பில் ஆரவாரம்

வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நயினை நாகபூஷணி அம்பாளின் இராஜகோபுரத்தின் மேலாக தோன்றிய மிகப் பெரிய வானவில் மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

நேற்றையதினம் இந்த வானவில் தோன்றியுள்ளது.

Advertisement

இந்த வானவில்லானது நயினை அம்மனின் ராஜகோபு அழகை மேலும் அழகாக்கியுள்ளது.

நயினை நாகபூஷணி அம்மனிற்கு அழகூட்டி   வானவில் தோன்றிய காட்சி சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.

யாழ்ப்பாணத்தில்  அமைந்துள்ள நயினை நாகபூஷணி அம்மன் ஆலயம் ஈழத்தில் அமைந்துள்ள சிறப்பு வாய்ந்த அம்மன் ஆலயங்களுள் ஒன்றாகும்.

Advertisement

நாகம் பூசித்ததால் நாகபூஷணி என நாமாவளி அம்மனுக்கு ஏற்பட்டதாக அலய வரலாறுகள் கூறுகின்றன.

இந்நிலையில்  அம்மனுக்குரிய  கேதார கௌரி நோன்பு  இடம்பெறும்  நாளில் இவ்வாறு  மிகபெரும் வானவில் தோன்றி அம்மனின் அகை மெருகூட்டியமை கண்ட பக்தர்கள் மெய்சிலிர்த்துபோயுள்ளனர்.

அதேவேளை  தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு கலங்கரை விளக்காய் அமைந்துள்ள நயினை தாய்,  ஈழ வரலாற்றில் பெரும் புகழ் படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

   

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version