விளையாட்டு

India vs Australia 1st ODI Live Streaming: இந்தியா – ஆஸ்திரேலியா முதல் ஒருநாள் போட்டி: ஆன்லைனில் நேரலையில் பார்ப்பது எப்படி?

Published

on

India vs Australia 1st ODI Live Streaming: இந்தியா – ஆஸ்திரேலியா முதல் ஒருநாள் போட்டி: ஆன்லைனில் நேரலையில் பார்ப்பது எப்படி?

India vs Australia 1st ODI Cricket Live Streaming: ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணமாக சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 3 ஒருநாள் மற்றும் 5 டி-20 போட்டியில் பங்கேற்று விளையாடுகிறது. இதில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி பெர்த்தில் நாளை ஞாயிற்றுக்கிழமை முதல் தொடங்கி நடக்கிறது. இதற்காக இரு அணி வீரர்களுக்கு தீவிரமாக பயிற்சி பெற்று வருகிறார்கள். இந்தியா vs ஆஸ்திரேலியா: முதல் ஒருநாள் போட்டி எப்போது நடைபெறும்?இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி அக்டோபர் 19 ஞாயிற்றுக்கிழமை காலை 9:00 மணிக்கு (இந்திய நேரப்படி) நடைபெறும். டாஸ் இந்திய நேரப்படி காலை 8:30 மணிக்கு போட திட்டமிடப்பட்டுள்ளது.இந்தியா vs ஆஸ்திரேலியா: ஒருநாள் போட்டி எங்கு நடைபெறும்?இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி பெர்த்தில் உள்ள ஆப்டஸ் மைதானத்தில் நடைபெறும்.இந்தியாவில் இந்தியா vs ஆஸ்திரேலியா: முதல் ஒருநாள் போட்டியை எந்த சேனல்கள் ஒளிபரப்பும்?இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி இந்தியாவில் உள்ள ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் நேரடியாக ஒளிபரப்பப்படும்.இந்தியா vs ஆஸ்திரேலியா: முதல் ஒருநாள் போட்டிக்கான நேரடி ஸ்ட்ரீமிங் எங்கே கிடைக்கும்?இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி இந்தியாவில் உள்ள ஜியோஹாட்ஸ்டார் ஆப் மற்றும் அதன் இணையதளத்தில் நேரடியாக ஒளிபரப்பப்படும்.இரு அணி வீரர்கள் பட்டியல்: இந்திய அணி: ரோகித் சர்மா, சுப்மன் கில் (கேப்டன்), விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல் (விக்கெட் கீப்பர்), அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ், வாஷிங்டன் சுந்தர், நிதிஷ் குமார் ரெட்டி, பிரஸ்ருவ் கிருஷ்ணா ரெட்டி.ஆஸ்திரேலிய அணி: டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ் (கேப்டன்), மார்னஸ் லாபுசாக்னே, மேத்யூ ஷார்ட், மேட் ரென்ஷா, மிட்செல் ஓவன், ஜோஷ் பிலிப் (விக்கெட் கீப்பர்), கூப்பர் கோனொலி, மிட்செல் ஸ்டார்க், சேவியர் பார்ட்லெட், ஜோஷ் ஹேசில்வுட், பென் டுவார்ஷுயிஸ், நாதன் எல்லிஸ், மேத்யூ குஹ்னெமன். 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version