உலகம்
அமெரிக்காவில் விமான விபத்து : 3பேர் பலி!
அமெரிக்காவில் விமான விபத்து : 3பேர் பலி!
அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் உள்ள பாத் டவுன்ஷிப் பகுதியில் சிறிய ரக விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியதில், அதில் பயணித்த மூன்று பேரும் சம்பவ இடத்திலே உடல் கருகி உயிரிழந்தனர்.
கிளார்க் வீதி மற்றும் பீகொக் வீதி சந்திக்கு அருகில் விமானம் விழுந்து நொறுங்கியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விமானத்தில் விமானி உட்பட மொத்தம் மூன்று பயணிகள் இருந்தனர். விபத்து நடந்த இடத்தில் விமானம் தீப்பிடித்து எரிந்ததில் மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பாத் டவுன்ஷிப் தீயணைப்பு மற்றும் பொலிஸார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். இவர்களுக்கு ஏனைய மீட்புக் குழுவினரும் உதவியளித்தனர்.
விபத்துக்கான காரணம் குறித்து விமானப் போக்குவரத்து நிர்வாகம் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகிறது. முதல்கட்ட விசாரணையில், விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே விழுந்து நொறுங்கியதாக தெரிய வந்துள்ளது.
விமானம் எங்கிருந்து புறப்பட்டது, அதன் நோக்கம் என்ன! என்பது பற்றியும் தகவல் தெரியவில்லை. மேலதிக விசாரணையின் பின்னர் மேலதிக தகவல்கள் வெளியிடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.