தொழில்நுட்பம்

அமேசான் தீபாவளி சேல்: 32 இன்ச் ஸ்மார்ட் டிவி வெறும் ரூ.5,999 மட்டுமே! மிரள வைக்கும் ஸ்மார்ட் டிவி டீல்கள்!

Published

on

அமேசான் தீபாவளி சேல்: 32 இன்ச் ஸ்மார்ட் டிவி வெறும் ரூ.5,999 மட்டுமே! மிரள வைக்கும் ஸ்மார்ட் டிவி டீல்கள்!

கடந்த மாதம் தொடங்கிய அமேசானின் பண்டிகைக் கால விற்பனை, தற்போது தீபாவளி சிறப்புச் சலுகைகளுடன் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, சாம்சங், டி.சி.எல் (TCL), சியோமி போன்ற முன்னணி நிறுவனங்களின் எல்.இ.டி. ஸ்மார்ட் டிவிகளுக்கு அமேசானில் அதிரடி தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. ஆச்சரியப்படும் விதமாக, இந்த ஸ்மார்ட் டிவிகள் ரூ.6,000க்கும் குறைவான ஆரம்ப விலையில் வாங்குவதற்கு கிடைக்கின்றன. தற்போது அமேசானில் கிடைக்கும் மிகவும் குறைந்த விலை ஸ்மார்ட் டிவி சலுகைகளைப் பற்றி இங்கே பார்க்கலாம்.VW (Visio World): 32-இன்ச் LED ஸ்மார்ட் டிவி-யின் விலை வெறும் ரூ.5,999 ஆகும். இது லினக்ஸ் இயங்குதளத்தில் இயங்குகிறது. இதில் அமேசான் பிரைம் வீடியோ, ஜியோ ஹாட்ஸ்டார், யூடியூப் போன்ற பிரபலமான ஆஃப்கள் முன்கூட்டியே இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளன.பிலிஃப்ஸ் (Philips): 32-இன்ச் QLED ஸ்மார்ட் டிவி-ஐ அதன் அசல் விலையான ரூ.22,999-ல் இருந்து 50% ஆபருடன் ரூ.11,499-க்கு வாங்கலாம். இது HD காட்சித் திரை மற்றும் கூகிள் டிவி இயங்குதளத்தைக் கொண்டுள்ளது.சியோமி டிவி A (Xiaomi TV A): சியோமியின் இந்த ஸ்மார்ட் டிவி, அதன் அசல் விலையான ரூ.24,999-ல் இருந்து 52% ஆபருடன் ரூ.11,999-க்கு கிடைக்கிறது. இதுவும் HD திரை மற்றும் கூகிள் டிவி இயங்குதளத்துடன் வருகிறது.TCL: இந்த QLED ஸ்மார்ட் டிவியின் விலை 39% ஆபருடன் இப்போது ரூ.13,990-க்கு விற்கப்படுகிறது. இதுவும் HD திரை, கூகிள் டிவி இயங்குதளத்தை கொண்டுள்ளது.சாம்சங் (Samsung): தென்கொரிய நிறுவனமான சாம்சங்கின் இந்த LED ஸ்மார்ட் டிவி ரூ.13,990க்கு பட்டியலிடப்பட்டுள்ளது. இது அதன் வெளியீட்டு விலையான ரூ.17,900-ஐ விட 22% குறைவு ஆகும். இதில் HD திரை, மற்றும் வெளிப்புற சாதனங்களை இணைக்கத் தேவையான HDMI மற்றும் USB போர்ட்கள் போன்ற அத்தியாவசிய இணைப்பு அம்சங்களும் உள்ளன. இந்த தீபாவளி ஆபர் மூலம், ஒரு புதிய ஸ்மார்ட் டிவியை மிகவும் மலிவான விலையில் வாங்குவதற்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version