டி.வி

இந்த வாரம் எலிமினேஷனில் சிக்கியது இவரா.? ரசிகர்கள் அதிருப்தி

Published

on

இந்த வாரம் எலிமினேஷனில் சிக்கியது இவரா.? ரசிகர்கள் அதிருப்தி

பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழில் மட்டும் இல்லாமல்  இந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது.  இந்த நிகழ்ச்சி ரசிகர்களின் மிகப்பெரிய வரவேற்பை  பெற்றதால் அந்தந்த மொழிகளில் உள்ள திரைப்பட பிரபலங்கள் அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகின்றனர்.   பிக் பாஸ் தமிழ் ஒன்பதாவது சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகின்றார்.  இந்த சீசனில் கலையரசன், வாட்டர் மேலன் ஸ்டார் திவாகர், கம்ரூதின், கனி, அரோரா, விஜே பார்வதி, வியானா,  வினோத், விக்ரம், சபரி, தூஷார், நந்தினி, ரம்யா ஜோ உட்பட 20 பேர் கலந்து கொண்டனர்.  இதில் நந்தினி தன்னால் இந்த வீட்டில் இருக்க முடியாது என்று வெளியேறினார். அதன்பின்பு முதலாவது வாரம் பிரவீன் காந்தி முதல் வார நாமினேசனின் வெளியேற்றப்பட்டார். தற்போது பிக் பாஸ் வீட்டில் 18 போட்டியாளர்கள்  காணப்படுகின்றனர். போட்டியாளர்கள் மத்தியில் ஒவ்வொரு நாளும்   ஒவ்வொரு பிரச்சனை  உருவாகும் நிலையில் இவர்கள் கண்டண்டிற்காகவே சண்டை போடுவதாக  ரசிகர்கள் இணையத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த நிலையில், இந்த வார எலிமினேஷனில்  அப்சரா சிக்கி  உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.  அதாவது ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு போட்டியாளர் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில் இந்த வாரம்  அப்சரா வெளியேற போவதாக தகவல்கள் கசிந்துள்ளன. அவர் காட்டிய பாசிட்டிவ் எனர்ஜி, க்ளாஸி ப்ரசென்ஸ் இன்னும் நீடித்திருக்கலாம் என்று பலரும் நினைக்கின்றார்கள்.  இதுவரை இவர் மீது எந்த ஒரு நெகட்டிவ் விமர்சனமும் பிக் பாஸ் வீட்டில் எழுந்ததில்லை. ஆனாலும் இவர்  தன்னுடைய திறமையை  இன்னும் வெளிக்காட்டவில்லை என்று ரசிகர்கள்  எண்ணுகின்றார்கள். 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version