இலங்கை

என் ஆரோக்கியத்திற்கு இதுதான் காரணம் ; மஹிந்த ராஜபக்ஷ

Published

on

என் ஆரோக்கியத்திற்கு இதுதான் காரணம் ; மஹிந்த ராஜபக்ஷ

மக்களின் அன்பு மற்றும் தொடர்புகளே தமது உடல் மற்றும் மன ஆரோக்கியத்துக்கு காரணம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தங்காலை கால்டன் இல்லத்தில் இருந்தவாறு சமூக ஊடக பதிவுகளில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

குறித்த பதிவில் “மக்களுடன் சுதந்திரமாக இருப்பதையே நான் மிகவும் விரும்புகிறேன். மக்களுடன் இருப்பது ஒருபோதும் எனக்கு சோர்வை ஏற்படுத்தாது. இது ஒரு பழக்கம்; ஒரு பிணைப்பு; அனைவருக்கும் கிடைக்காத ஒரு வாய்ப்பு.

மக்களின் மனதில் உருவாகும் நம்பிக்கை மற்றும் பாசம் ஆகியவற்றின் அடிப்படையில் உருவாகும் மனித உறவுகளே, ஒரு மக்கள் தலைவரின் சகிப்புத்தன்மையையும், தைரியத்துடன் சவால்களை எதிர்கொள்ளும் திறனையும் வளர்க்கிறது.

மக்கள் மத்தியில் இருப்பது என்னை உடலால் மேலும் பலப்படுத்துகிறது; மனதை ஆரோக்கியமாக்குகிறது,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

அத்துடன், “எப்போதும் ஒரே மாதிரி வந்து நலம் விசாரிக்கும், அன்புடன் உரையாடும் பிரியமான மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்; அரசியல் சகாக்களையும் நினைவுகூருகிறேன்; உங்கள் அனைவருக்கும் நன்றி,” எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version