சினிமா

கம்ருதீனின் பெயரை அரங்கம் அதிர கத்திய ஹவுஸ்மேட்ஸ்.! VJS ஜாலியா சொன்ன விஷயம்

Published

on

கம்ருதீனின் பெயரை அரங்கம் அதிர கத்திய ஹவுஸ்மேட்ஸ்.! VJS ஜாலியா சொன்ன விஷயம்

கடந்த 2017ஆம் ஆண்டில் இருந்து  பிக் பாஸ் நிகழ்ச்சி விஜய் டிவியில் ரசிகர்களின் ஆதரவை பெற்று ஒளிபரப்பாகி வருகிறது.  தற்போது இந்த நிகழ்ச்சி  9வது சீசனை எட்டியுள்ளது. பிக் பாஸ் தமிழில் மட்டும் இல்லாமல் ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் ஒளிபரப்பாகி வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் வரை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். அதன் பின்பு அந்த நிகழ்ச்சியில் இருந்து அவர்  வெளியேறிய பின்னர் 8வது சீசனில் இருந்து நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகின்றார். இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்க ஆரம்பித்ததில் இருந்து இந்த நிகழ்ச்சியின் டிஆர்பி  எகிறியதாக கூறப்படுகிறது.  அவருடைய எதார்த்தமான பேச்சுனால் டிஆர்பி அதிகரித்துள்ளதாம்.இந்த நிலையில்,  பிக் பாஸ்  நிகழ்ச்சியில் 9வது சீசன் ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் இரண்டு வாரங்களை கடந்துள்ளது.  தற்போது இன்றைய நாளுக்கான முதலாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என்பதை பார்ப்போம். அதில் வழமை போல மாஸாக என்ட்ரி கொடுத்த விஜய் சேதுபதி, ஐந்து பேரில் யாரு எலிமினேட் ஆவாங்க என்று நீங்க நினைக்கிறீங்க? என பிக் பாஸ் வீட்டில் உள்ள ஹவுஸ் மேட்ஸை பார்த்து கேட்கின்றார். அதற்கு அதிகமானோர் கம்ருதீனின் பெயரையும்  சொல்லுகின்றனர்.  மேலும் அப்சராவின் பெயரையும்  சொல்லுகின்றார்கள்.  இதனால் போறவங்க ஜாலியா அவங்க வீட்ல தீபாவளிய கொண்டாடுங்க  என விஜய் சேதுபதி  சொல்லுகின்றார். இதுதான் தற்போது வெளியான ப்ரோமோ .  ஏற்கனவே  பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து அப்சரா வெளியாகி உள்ளதாக தகவல்கள் கசிந்து உள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version