இலங்கை
நாட்டின் பல பகுதிகளில் கனமழை பெய்யும்!
நாட்டின் பல பகுதிகளில் கனமழை பெய்யும்!
கனமழை தொடர்பான எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட வானிலை ஆய்வுத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
அறிவிப்பின்படி நாட்டின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு, சப்ரகமுவ, தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீட்டருக்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும் என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கனமழையுடன் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னலால் ஏற்படும் ஆபத்துகளைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்தத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லங்கா4 (Lanka4)
அனுசரணை