டி.வி
நாமினேஷனை கலகலப்பாக மாற்றிய திவாகர்.! Inner எடுத்துப் போடுறீங்களான்னு கேட்டது ஒரு குத்தமா?
நாமினேஷனை கலகலப்பாக மாற்றிய திவாகர்.! Inner எடுத்துப் போடுறீங்களான்னு கேட்டது ஒரு குத்தமா?
விஜய் டிவியின் மாபெரும் ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் சீசன் 9 தற்போது துவங்கி சில நாட்களிலேயே ரசிகர்களிடையே வலிமையான வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த சீசனில் பங்கேற்றுள்ள போட்டியாளர்களின் தனித்துவமான நடத்தை, நகைச்சுவை மற்றும் உணர்வுபூர்வமான சம்பவங்கள் நாளுக்கு நாள் ரசிகர்களை ஒவ்வொரு நாளும் கவர்ந்து வருகின்றது.இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் நடந்த நாமினேஷனில், ரசிகர்களை literally சிரிக்க வைக்கும் அளவிற்கு ஒரு காமெடியான சம்பவம் நடந்திருக்கிறது. அந்த சம்பவத்தை ஏற்படுத்தியவர் வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர்.பிக்பாஸ் வீட்டில் வாரந்தோறும் நடைபெறும் நாமினேஷனை போட்டியாளர்கள் சீரியஸாகவும், விவாதத்துடனும், யாரை வெளியே அனுப்பவேண்டும் என முடிவெடுத்து வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் நிகழ்ந்த நாமினேஷனில் வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர், கானா வினோத்தை Inner எடுத்துப் போடுறீங்களான்னு கேட்டதற்கு நாமினேஷன் செய்துள்ளார்.பிக்பாஸில் இதுவரை நடைபெற்ற அனைத்து சீசன்களில், நாமினேஷன் என்பது உணர்ச்சிபூர்வமாக நிகழ்ந்து வந்தது. ஆனால், இந்த சீசன் 9 இல், திவாகர் அந்த சீரியஸான கோணத்தை முற்றிலும் சிரிப்புடன் மாற்றியிருக்கிறார். இதனை ரசிகர்கள் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர். இவ்வாறாக பிக்பாஸ் வீடு தற்பொழுது கலகலப்பாக மாறி உள்ளது.