சினிமா
பாக்ஸ் ஆபிஸ் கலெக்சனில் அடித்து நொறுக்கிய பைசன்.! 2வது நாள் ரிப்போர்ட் இதோ..
பாக்ஸ் ஆபிஸ் கலெக்சனில் அடித்து நொறுக்கிய பைசன்.! 2வது நாள் ரிப்போர்ட் இதோ..
மாரி செல்வராஜ் – துருவ் விக்ரம் கூட்டணியில் வெளியான திரைப்படம் தான் பைசன். இந்த படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றிருக்கின்றது. அர்ஜுனா விருது வென்ற கபடி வீரர் மணத்தி கணேசனின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு, சாதி வேற்றுமை இல்லாமல் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதை இயக்குநர் சொன்ன விதம் பார்ப்போரை ரசிக்கும் படி இருந்தது. துருவ் முன்னர் நடித்த இரண்டு படங்களும் பெரிதாக அவருக்கு கை கொடுக்கவில்லை என்பதால் இந்த படத்தை அதிக அளவில் எதிர்பார்த்து இருந்தார். அதேபோல பைசன் படம் வெளியாகி ரசிகர்களிடம் மட்டுமின்றி திரைத்துறையில் உள்ளவர்களிடமும் பெரிய பாராட்டை பெற்று வருகின்றது. பைசன் படம் எதிர்பார்த்தபடியே தரமாக இருக்கின்றது. சாதி பாகுபாடு கூடாது என்பதையும் சுய சாதிக் கொள்ளையே சாதி வெறி பிடித்தவர்களை எப்படி டீல் செய்ய வேண்டும் என்று பல விஷயங்களை இயக்குநர் அழகாக எடுத்துக்காட்டியுள்ளார். இதற்கு நெகட்டிவ் விமர்சனங்கள் இருந்தாலும் படத்தை அது பாதிக்கவில்லை. எனினும் மாரி செல்வராஜின் படங்கள் என்றாலே பலர் எதிர்க்க வருவார்கள். அதைப்போல இந்தப் படத்திற்கும் பல எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. அது மட்டும் இல்லாமல் மாரி செல்வராஜை கைது செய்ய வேண்டும் என்றும் கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றதாம்.இந்த நிலையில், பைசன் படத்திற்கான இரண்டாவது நாள் வசூல் விவரம் வெளியாகி உள்ளது. அதன்படி ஒரு மணி நேரத்துக்கு சுமார் 5000 டிக்கெட் புக் மை ஷோவில் புக் ஆகின்றது. இந்த படம் முதலாவது நாளில் 2.55 கோடி வசூலித்தது. இதன் இரண்டாவது நாளான நேற்று மூன்று கோடி ரூபாயை வசூலித்திருக்கின்றதாம். ஆக மொத்தம் இந்தியாவில் இந்த படம் இரண்டு நாட்களில் கிட்டத்தட்ட ஆறு கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது.