இலங்கை

போதைப்பொருள் கடத்தல்காரருடன் தொடர்பிலிருந்த பெண்ணுக்கு நேர்ந்த கதி

Published

on

போதைப்பொருள் கடத்தல்காரருடன் தொடர்பிலிருந்த பெண்ணுக்கு நேர்ந்த கதி

வெளிநாட்டிலுள்ள குற்றக்குழு உறுப்பினரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான ‘ஹீனட்டிய மகேஷுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணி, நாட்டில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 37 வயதுடைய பெண்ணொருவர் விசேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அவரிடமிருந்து 500 கிராம் ‘ஏஷ்’ ரக போதைப்பொருளும் மீட்கப்பட்டுள்ளது.

Advertisement

கட்டுநாயக்க, ஆடிஅம்பலம பிரதேசத்தைச் சேர்ந்த இந்தப் பெண், 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இடம்பெற்ற துப்பாக்கி சம்பவமொன்றில் துப்பாக்கிதாரிகளுக்கு வாகனங்கள் மூலம் உதவிகளை வழங்கியவர் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இவர், வென்னப்புவ பிரதேசத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்தபோது விசேட அதிரடிப்படையினரால் (STF) கைது செய்யப்பட்டார்.

அவருக்கு உதவிய முச்சக்கர வண்டி சாரதியான 25 வயதுடைய இளைஞர் ஒருவரும் கைது செய்யப்பட்டு, மேலதிக விசாரணைகளுக்காக வென்னப்புவ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version