சினிமா
முத்துவை மன்னிப்பு கேட்க சொல்லும் சீதா.. அதிரடியாக களத்தில் இறங்கிய மீனா
முத்துவை மன்னிப்பு கேட்க சொல்லும் சீதா.. அதிரடியாக களத்தில் இறங்கிய மீனா
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் தனித்துவம் வாய்ந்தவையாக காணப்படுகின்றன. இந்த சேனலில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் மட்டுமின்றி ரியாலிட்டி ஷோக்கள், நிகழ்ச்சிகள் என்பனவும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக காணப்படுகின்றன. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுள் டிஆர்பி ரேட்டிங்கில் முதல் நிலையில் சிறகடிக்க ஆசை சீரியல் காணப்படுகின்றது. இந்த சீரியல் ஆரம்பித்த குறுகிய கால பகுதிக்குள்ளேயே தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கிக் கொண்டது. இந்த நிலையில், சிறகடிக்க ஆசை சீரியலின் அடுத்த கதைக்களம் பற்றிய புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் என்ன நடக்குது என்பதை விரிவாக பார்ப்போம் .அதில் ஏற்கனவே அருணுக்கும் முத்துக்கும் இடையில் விரிசல் காணப்படுவதால் அருண் முத்து மீது தனது கோபத்தை காட்டி வருகின்றார். ஆனாலும் முத்து தன்னால் இயன்ற உதவிகளை பிறருக்கு செய்கின்றார். அதன்படி முத்து விபத்தில் சிக்கிய ஒரு பெண்ணை காப்பாற்றுகின்றார். அந்த இடத்தில் இருந்தவர்கள் எல்லோரும் அதனை வீடியோ எடுக்கின்றார்கள். அதற்குப் பின்பு இந்த சம்பவத்திற்கு அருண் பெயர் எடுக்கின்றார். இதனால் சம்பவ இடத்தில் இருந்தவர்கள் முத்து தான் அவரை காப்பாற்றியதாக உண்மையை போட்டு உடைக்கின்றார்கள். தற்போது இந்த சம்பவத்தினால் அருணுக்கு வேலை பறிபோகிறது. இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திய அருண், முத்து தான் ஆட்களை செட் பண்ணி வீடியோ எடுக்க வைத்து அதை மீடியாவில் தெரிவித்ததாக தனது வீட்டில் தெரிவிக்கின்றார். இதை நம்பிய சீதா, தனது அம்மா வீட்டுக்குச் சென்று அங்கு மாமா நடந்து கொண்டது சரியில்லை. அவர் அருணிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என மீனாவிடம் சொல்லுகின்றார். இதைக் கேட்ட மீனா, அவர் எதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்? இந்த பிரச்சனையை அப்படியே விட்டு இருந்தால் தானாகவே சரியாகும் என்று சொல்ல. முத்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சீதா சொல்கின்றார். இதனால் கோபப்பட்ட மீனா அவர் மன்னிப்பு கேட்க மாட்டார், கேட்கவும் விடமாட்டேன் என்று கோபமாக பேசுகின்றார் . இது தான் தற்போது வெளியான ப்ரோமோ.