இலங்கை
வடக்கில் களைகட்டிய தீபாவளி வியாபாரம்!
வடக்கில் களைகட்டிய தீபாவளி வியாபாரம்!
தீபாவளி திருநாளை முன்னிட்டு வடக்கு மாகாணத்தில் வியாபாரம் களை கட்டியுள்ளது.
நாளையதினம் உலகம் பூராவும் உள்ள இந்து மக்களினால் கொண்டாடப்படவுள்ள தீபாவளி திருநாள் முன்னிட்டு நாடுமுழுவதும் வியாபாரம் களை கட்டி வருகின்றது.
அதன்படி, வவுனியா நகரிற்கு அதிகளவிலான மக்கள் வருகை தந்து புத்தாடைகள், வெடிகள், இனிப்பு பண்டங்களை கொள்வனவு செய்ததை அவதானிக்க முடிந்தது. கடந்த வருடத்தை விட இம் முறை தீபாவளி வியாபாரம் களை கட்டியுள்ளதுடன், மக்கள் தீபாவளி கொண்டாட்டத்திற்கு ஆர்வத்துடன் தயாராகி வருவதையும் அவதானிக்க முடிந்தது.
இதேவேளை கிளிநொச்சி நகரப் பகுதியில் தீபாவளியை முன்னிட்டு வர்த்தக நிலையங்கள் அனைத்திலும் மக்கள் கூட்டமாக திரண்டு தீபாவளி பண்டிகைக்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொள்வதும் அவதானிக்க கூடியவாறு இருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.