விளையாட்டு
ஸ்மிருதி மந்தனா காதல் திருமணம் இவருடன் தான்: உறுதி செய்த பாலிவுட் இசை அமைப்பாளர்
ஸ்மிருதி மந்தனா காதல் திருமணம் இவருடன் தான்: உறுதி செய்த பாலிவுட் இசை அமைப்பாளர்
சினிமாவில் திரை நட்சத்திரங்கள் ஸ்போர்ட்ஸ் வீரர்களையும் வீராங்கனைகளையும் திருமணம் செய்து வருவது ட்ரெண்டான ஒரு விஷயமாக மாறிவிட்டது. நடிகை அனுஷ்கா சர்மா, இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு தற்போது ஒரு குழந்தை உள்ளது. அதேபோன்று, நடிகர் விஷ்ணு விஷால், விளையாட்டு வீராங்கனையான ஜுவாலா கட்டாவை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கும் சமீபத்தில் குழந்தை பிறந்தது.இந்த வரிசையில் தற்போது கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவும் இணைந்துள்ளார். இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் துணைத் தலைவரும் தொடக்க வீராங்கனையுமான ஸ்மிருதி மந்தனா, ஐஐசி மகளிர் உலக கோப்பை ஒருநாள் போட்டியில் இங்கிலாந்தை எதிர்கொள்ள தயாராகி வருகிறார். ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முந்தைய இரண்டு ஆட்டங்களில் இந்தியா தோல்வியை சந்தித்தது. இதனால், அரையிறுதி போட்டிக்கு செல்லும் வாய்ப்பில் நீடிக்க இந்த ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெறுவது மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.இந்நிலையில், இங்கிலாந்து அணிக்கு எதிராக மோதும் முக்கிய போட்டிக்கு முன்னதாக இசையமைப்பாளர் பலாஷ் முச்சால், மாநில பத்திரிகையாளர் மன்றத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் எதிர்பாராத அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதாவது, ”ஸ்மிருதி மந்தனா விரைவில் இந்தூரின் மருமகளாக உள்ளார். நான் சொல்ல விரும்புவது அவ்வளவு தான்” என்றார்.ஸ்மிருதி மந்தனா – பலாஷ் முச்சால் ஜோடி காதலித்து வருவதாக கூறப்பட்ட நிலையில் நிகழ்ச்சிகள் அனைத்திலும் ஒன்றாக கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் இந்த ஜோடி அடிக்கடி சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பகிர்ந்திருந்தாலும் திருமணத்தை குறித்து பொது வெளியில் இதுவரை உறுதிப்படுத்தவிலை. தற்போது முதல் முறையாக ஸ்மிருதி மந்தனா – பலாஷ் முச்சால் தங்களது திருமணத்தை பொதுவெளியில் உறுதிப்படுத்தியுள்ளனர்.பலாஷ் முச்சால் தற்போது தனது முதல் படத்திற்கு இசையமைத்து வருகிறார். இந்தப் படத்தில் அவிகா கோர் மற்றும் சந்தன் ராய் ஆகியோர் நடிக்கின்றனர். மேலும், பலாஷ் முச்சால், தன் சகோதரி பலக் முச்சால் உடன் இணைந்து பல பாலிவுட் திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளதாக கூறப்படுகிறது.