சினிமா
அஜித் சாருடன் மீண்டும் நடிக்க விரும்புகிறேன்… – உண்மையைப் பகிர்ந்த வித்யுத் ஜாம்வால்.!
அஜித் சாருடன் மீண்டும் நடிக்க விரும்புகிறேன்… – உண்மையைப் பகிர்ந்த வித்யுத் ஜாம்வால்.!
தமிழ் திரைத்துறையில் action வேடங்களில் தனிச்சிறப்புடன் இடம்பிடித்த நடிகர் வித்யுத் ஜாம்வால், தற்போது பகிர்ந்த ஒரு நெகிழ்ச்சியான அனுபவம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.அதன்போது வித்யுத், “அஜித் சாருடன் மீண்டும் இணைந்து நடிக்க விரும்புகிறேன். நான் ஒரு பெரிய நடிகராவதற்கு முன்பே, ‘பில்லா 2’ படப்பிடிப்பின் போது அவர் எனக்கு ஆலோசனைகள் வழங்கினார். அவர் உண்மையிலேயே ஒரு சிறந்த மனிதர்!” என்று தெரிவித்திருந்தார். இந்த உரையாடல், ஒரு செய்தி நிறுவனத்துடனான நேர்காணலில் இடம்பெற்றது. தற்போது அது சமூக ஊடகங்களில் வைரலாகி, அஜித் ரசிகர்களிடையே பெரும் சந்தோஷத்தையும் எதிர்பார்ப்பையும் உருவாக்கியுள்ளது.2012ஆம் ஆண்டு வெளியான ‘பில்லா 2’ திரைப்படம், தமிழ் சினிமாவில் மிகுந்த எதிர்பார்ப்புடன் வந்த படம். அஜித் குமாரின் ஸ்டைலிஷான கதாபாத்திரம், திரைப்படத்திற்கு பெரிய வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. இந்தப் படத்தில் முக்கிய வில்லனாக நடித்தவர் தான் வித்யுத் ஜாம்வால். அவருடைய நடிப்பும், action sequences உம் ரசிகர்களிடம் பெரும் பாராட்டை பெற்றன. இந்த படம் தான் வித்யுத் ஜாம்வாலின் தமிழ் சினிமா பயணத்திற்கு ஒரு திறக்கும் கதவாக அமைந்தது.